Connect with us

Cinema News

கேரளா ரசிகர்களின் கெத்தே தனி தான்!.. எவ்ளோ பெரிய கட் அவுட்.. பக்கெட்டில் பால் ஊத்துறாங்களே!..

லியோ படத்தின் செலிபிரேஷன் தமிழ்நாட்டில் ஆரம்பமாகும் முன்னமே கேரளாவில் களைகட்டி வருகிறது. தளபதியின் கோட்டையான கொல்லம் எனும் இடத்தில் பிரம்மாண்ட லியோ கட் அவுட்டை வைத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சென்னையில் இன்னும் தியேட்டர் டிக்கெட் புக்கிங்கே தொடங்காத டென்ஷனில் விஜய் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ள நிலையில், கேரளாவில் அதிகாலை 4 மணிக்கே லியோ படத்தை பார்க்கப் போகும் ரசிகர்கள் அதனை முன்னிட்டு கொண்டாட்டத்தை 4 நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: அய்யோ போச்சே!.. மோடி ஸ்டேடியத்தில் லெஜண்ட் லேடியிடமே வேலையை காட்டிடாங்களா!.. கதறும் ஊர்வசி!..

பெங்களூரு, உள்ளிட்ட பல இடங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டரில் டிக்கெட் விலையே 2000 ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், அதையும் கொடுத்து வாங்க ரசிகர்கள் க்யூவில் வரிசை கட்டி நிற்கும் காட்சிகள் எல்லாம் இணையத்தில் பரவி விஜய்யின் தெறி மாஸை உலகுக்கு காட்டி வருகிறது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் முறையான பாதுகாப்புடன் அதிகாலை காட்சி வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தளபதி ரசிகர்கள் லியோ படத்தை காலை 9 மணிக்குத் தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது.

இதையும் படிங்க: எத மூடினாலும் அத மூடமாட்டேன்!.. ஓப்பனா விட்டு விருந்து வைக்கும் திவ்யா துரைசாமி…

கேரளாவின் கொல்லத்தில் உள்ள தன்யா ரெமா திரையரங்கில் தியேட்டரை விட மிகப்பெரிய அளவிலான விஜய்யின் லியோ தாஸ் கட் அவுட்டை வைக்கும் காட்சிகளும், அந்த சந்தோஷத்தை பட்டாசு வெடித்து கொண்டாடும் காட்சிகளும் சென்னை ரசிகர்களையே பொறாமை கொள்ளச் செய்துள்ளது.

மேலும், பக்கெட் நிறைய பால் வைத்து அபிஷேகம் செய்யும் காட்சிகளை பார்த்த தளபதி ரசிகர்கள் இந்த முறை பாலாபிஷேகம் செய்ய மாட்டோம் என உறுதி மொழியை அவசரப்பட்டு எடுத்து விட்டோமோ என புலம்பி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top