Connect with us

Cinema News

வாடகைக்கு பேரம் பேசிக்கொடுத்த சூப்பர்ஸ்டார்… பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெருமிதம்!

Kalaipuli S. Thanu: தமிழ் சினிமாவின் டாப் ஹிட் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த தாணு தனக்கு சினிமாவில் நிறைய ஹீரோக்களை தெரிந்தாலும் இவரை மட்டும் தன்னால் மறக்கவே முடியாது. அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் எனக் கூறி இருந்தார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் தாணு ஒரு பேட்டியில் சிவாஜிக்கும் தனக்குமான உறவை பகிர்ந்து இருந்தார். அதில் இருந்து, சிவாஜிகணேசன் தன்னுடைய சினிமா கேரியரில் கடைசியாக நடித்த மூன்று படங்களில் ஒன்று தான் மன்னவரு சின்னவரு. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார். அப்போது அப்படத்தில் நடித்த சிவாஜியும் இவருடன் பாசமாக இருப்பாராம். சிவாஜி ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டால் மற்ற அனைத்தையுமே மறந்து விடுவாராம். எதை பற்றியும் யோசிக்காதவர்.

இதையும் படிங்க: ஷாருக்கானுடன் நடிக்க கறார் கண்டிஷன் போட்ட கட்டப்பா!.. நடிகர்லாம் இவர்கிட்ட கத்துக்கோங்கப்பா!…

அப்படி இருக்கும் போது ‘மன்னவரு சின்னவரு’ படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் தயாரிப்பாளர் தாணுக்காக தன் நிலையில் இருந்து இறங்கி பேரமெல்லாம் சிவாஜியே பேசினாராம். பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இருக்கிறது. எதேர்ச்சையாக அங்கிருந்தவர்களிடம் இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு வாடகை எவ்வளவு எனக் கேட்டு இருக்கிறார்.

அவர்களும் 25 ஆயிரம் ரூபாய் என்றனராம். அதை கேட்ட சிவாஜி ஷாக்காகி விட்டாராம். இந்த இடத்தோட ஓனரை வரச் சொல்லுங்க எனக் கூப்பிட்டு விட்டு இருக்கிறார். அதே சமயத்தில் புலி எங்கே? என்று தாணுவையும் கூப்பிட்டாராம். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் சிவாஜியே களத்தில் குதித்து விட்டார்.

இதையும் படிங்க: எல்லாத்தையும் சொல்லப் போறேன்! புது அவதாரம் எடுத்து வச்சி செய்யப் போகும் நடிகை – இது வேற ரகம்

மேனேஜரை அழைத்து இந்த சின்ன இடத்துக்கு ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் ரொம்பவே அதிகம். 10 ஆயிரம் தான் கொடுக்கலாம். உங்க ஓனரிடம் சொல்லுங்க. இனி நான் இங்கு நடிக்கவே மாட்டேன் என்றாராம். இந்த விஷயத்தினை அறிந்த லாட்ஜ் ஓனரும் சிவாஜிக்காக வாடகையை நாளுக்கு 10 ஆயிரம் மட்டுமே வாங்கி கொண்டாராம்.

அதேப்போல, மன்னவரு சின்னவரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, சிவாஜிக்கு சளித்தொந்தரவு இருந்ததாம். நெபிளேசர் மூலம் தொண்டை சளியை அப்புறப்படுத்தி விட்டு அப்புறம் ஷூட்டிங் வருவாராம். இதுகுறித்து தாணு கேட்ட போது கூட, யார் யாருக்கோ பண்றேன். என்னை நேசிக்கிற உனக்காக இந்த கஷ்டத்தைத் தாங்கமாட்டேனா புலி எனக் கேட்டு ஆச்சரியப்படுத்தினாராம். 

 

Continue Reading

More in Cinema News

To Top