Connect with us
sathyaraj

Cinema History

ஷாருக்கானுடன் நடிக்க கறார் கண்டிஷன் போட்ட கட்டப்பா!.. நடிகர்லாம் இவர்கிட்ட கத்துக்கோங்கப்பா!…

Actor sathiyaraj: தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் சத்தியராஜ். துவக்கத்தில் வில்லனிடம் ‘யெஸ் பாஸ்’ என்கிற ஒரு வசனம் மட்டுமே பேசும் அடியாளாக பல படங்களில் நடித்திருக்கிறார். மணிவண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் இயக்கிய நூறாவது நாள் படம் மூலம் அசத்தல் வில்லனாக வந்து ரசிகர்களை பயமுறுத்தினார்.

80களில் பல படங்களில் கதாநாயகனின் தங்கையை கற்பழிக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார். சத்தியராஜ் நடித்தாலே அதில் ரேப் சீன் இருக்கும் என ரசிகர்கள் நினைத்த காலம் கூட உண்டு. சத்தியராஜுக்குள் இருக்கும் நடிகனை சரியாக கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் மணிவண்ணன் மட்டுமே. மணிவண்னன் சொல்லிக்கொடுத்த ஸ்டைலை சரியாக பிடித்துக்கொண்டு சத்தியராஜ் முன்னேறினார்.

இதையும் படிங்க: கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க மன்சூர் அலிகான் செஞ்ச வேலை!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..

மணிவண்ணனின் இயக்கத்தில் நடித்த அமைதிப்படை திரைப்படம் சத்தியராஜின் திரைவாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாகும். ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சொல்லி 90களில் பல படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்தார். ஆனால், வயது ஆகிவிடவே இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் சத்தியராஜ் ஏற்ற கட்டப்பா வேடம் பேன் இண்டியா அளவில் அவரை பிரலப்படுத்தியது. சினிமாவை தாண்டி சத்தியராஜ் ஒரு மொழிப்பற்று மற்றும் சமூகப்பற்றுள்ள மனிதர், முற்போக்குவாதி, நாத்திகவாதி, பெரியாரை நேசிக்கும் ஒரு மனிதர், சத்தமில்லாமல் பலருக்கும் உதவும் குணம் கொண்டவர் என அவருக்கு பல முகங்கள் உண்டு.

இதையும் படிங்க: லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் செய்த வேலை!.. இது எங்க போய் முடியுமோ!…

ஹிந்தியில் உருவாகி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் தீபிகா படுகோனின் அப்பாவாக சத்தியராஜ் நடித்திருப்பார். வடக்கன்ஸ்களை பற்றி தெரிந்துகொண்ட சத்தியராஜ் இந்த படத்தின் இயக்குனரிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ கதாபத்திரம் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டட்டும், விமர்சிக்கட்டும். ஆனால், மொத்தமாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே இப்படித்தான் என சொல்வது போல் எந்த இடத்திலும் வசனம் இருக்கக்கூடாது’ என சொல்லி அதை ஒப்பந்தத்திலும் சேர்த்து அதன் பின்னரே அப்படத்தில் நடிக்க கையொப்பம் போட்டாராம்.

கட்டப்பாக்கிட்ட கத்துக்கோங்கப்பா!…

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் மாறிய முக்கிய காட்சி!. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தோட ஹலைட்டே அதுதான்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top