கடைசி நேரத்தில் மாறிய முக்கிய காட்சி!. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தோட ஹலைட்டே அதுதான்!...

Samsaram adhu minsaram: விசுவின் இயக்கத்தில் உருவான படம் சம்சாரம் அது மின்சாரம். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவில்லை. ஆனால் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வசூலை பெற்றது. அதற்கு காரணம் அப்படத்தில் எதார்த்தமான காட்சிகளை விசு எடுத்திருந்தார்.

இப்படத்தில் விசு, மனோரமா, லட்சுமி, ரகுவரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தனர். ஏவிஎம் சரவணன் தயாரித்து இருந்தார். இப்படத்தில் எல்லா காட்சிகளையும் எழுதியது போலவே எடுத்து இருந்தாராம் விசு.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: பில்லு கட்ட காசு இல்ல.. இதுல ஜுவல்லா?… கோபி சார் நீங்க காலி தான் போலயே..!

ஆனால் ஒரு காட்சியில் மட்டும் மாற்றம் செய்தாராம். அந்த காட்சி குழந்தையை கோயிலில் மனோரமா போடும் காட்சி தானாம். ஆனால் அந்த காட்சியில் முதலில் நடிக்க இருந்தது லட்சுமி தானாம். அவர் கோயிலுக்கு வந்து, உங்க வீட்டில் இருந்து எந்தப் பொருளும் எடுத்துக்கலை.

ஆனா இந்த குழந்தை யாருக்கு சொந்தம்? நான் பெத்ததால எனக்கு சொந்தமா? உங்க குடும்பத்துல பிறந்ததால, உங்களுக்குச் சொந்தமா மாமா?ன்னு கேக்கற மாதிரி எழுதி இருந்தாராம். மறுநாள் காலையில் கோவூர் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. முந்தைய நாள் ஷூட்டிங் முடிச்சிட்டு விசு தன் தம்பியயுடன் காரில் கிளம்பி விட்டார்.

அப்போது அவர் தான் விசுவிடம், லட்சுமியே கோயிலுக்கு வந்து வாதாடிட்டு, அவரே பிரிஞ்சே இருப்போம்னு சொன்னா நல்லாருக்குமா? எனக் கேட்டு இருக்கிறார். விசுவுக்கும் அப்போ தான் புரிந்து இருக்கு. உடனே காரை நிறுத்தி அருகில் இருந்த பூத் மூலம் லட்சுமிக்கு கால் செய்து பேச வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றனர். அவரும் சொல்லுங்க எனக் கேட்க, இந்த காட்சி பிரச்னையை சொல்லி விட்டாராம்.

இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: ஸ்ருதி-ரவி கல்யாண ஜோடியாகிடுவாங்க… முத்து - மீனா வாழ்க்கைக்கு தான் ஆப்பு போல..!

லட்சுமி தான் மனோரமா ஐடியா கொடுத்தாராம். அடுத்த நாள் காலை மனோரமாவுக்கு 9 மணிக்கு வேறு ஒரு ஷூட்டிங் செல்லும் நிலை அவரை காலை 7 மணிக்கே ஷூட்டிங் அழைத்து விட்டாராம் விசு. அடுத்த 1.30 மணி நேரத்தில் குறிப்பிட்ட அந்த காட்சியை ஷூட் செய்து அனுப்பி இருந்தார் என்று அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Related Articles

Next Story