Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: ஸ்ருதி-ரவி கல்யாண ஜோடியாகிடுவாங்க… முத்து – மீனா வாழ்க்கைக்கு தான் ஆப்பு போல..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியை காண அவர் வீட்டுக்கு வருகிறார் சீதா. ஸ்ருதி அப்பா- அம்மாவிடம் நான் ஸ்கூலில் அவ கூட படிச்சேன் என சீதா கூறுகிறார். அதையடுத்து ஸ்ருதியின் ரூமுக்கு செல்கிறார் சீதா. இருவரும் ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க எப்ப கல்யாணம் செய்துக்க போறீங்க எனக் கேட்கிறார் சீதா. இன்னும் இரண்டு நாளுல பண்ணிக்கணும் என்கிறார்.

எப்படி வீட்டை விட்டு வெளியில வருவீங்க என்கிறார் சீதா. அப்போ அவர் கையில் இருக்கும் பத்திரிக்கையை பார்த்த ஸ்ருதி இதை உன் திருமண பத்திரிக்கைனு கூறி என்னை அப்பா-அம்மாவிடம் இன்வைட் செய்ய என ஐடியா கொடுக்கிறார். அவர் சொன்னது போலவே சீதா அழைத்துவிட்டு செல்கிறார்.

இதையும் வாசிங்க:அந்த நடிகர் மாதிரி நடிங்க!. ரஜினியிடம் வாயை விட்டு மாட்டிகொண்டு முழித்த பிரபல இயக்குனர்…

இதே நேரத்தில் இரண்டு நாள் பயணமாக முத்து வெளியூர் ட்ரிப் செல்லும் நிலை வருகிறது. மீனாவிடம் எனக்கு இரண்டு நாளைக்கு ட்ரஸ் எடுத்து வை எனக் கூறுகிறார். அப்போ என் தொல்லை இல்லாம ரெண்டு நாள் இருப்பீங்க எனக் கேட்கிறார். எனக்கும் நீ இல்லாம இரண்டு நாள் கஷ்டம் தான். அட்ஜெஸ்ட் பண்ணிக்க வந்திடுறேன் எனக் கூறி காரில் கிளம்பி விடுகிறார்.

ஸ்ருதி தன் அப்பா, அம்மாவிடம் கல்யாணத்துக்கு நான் போகணும் எனக் கூற அதெல்லாம் தேவையில்ல மெசேஜோ இல்ல போனோ செஞ்சி சொல்லிடு என்கிறார். உடனே ரூமுக்கு வரும் ஸ்ருதி பிஜூக்கு கால் செய்து என் ப்ரெண்ட் கல்யாணம். உன்ன பாக்கணும் சொன்ன நீயும் வா எனக் கேட்க அவரும் ஓகே சொல்கிறார்.

இதையடுத்து மீண்டும் ரவியை காண வரும் சீதா. அப்போ ஸ்ருதி சொன்னதை கூறுகிறார். ரிஜிஸ்டர் ஆபிஸில் ஸ்ருதி அப்பாவுக்கு தெரிந்த எல்லாரும் இருப்பாங்க. அதனால் உனக்கு தெரிந்த அந்த கோயில்லையே கல்யாணம் செஞ்சிடலாம் எனக் கேட்கிறார். உங்க அம்மா வராம நீ தான் பாத்துக்கணும் என்கிறார்.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: பில்லு கட்ட காசு இல்ல.. இதுல ஜுவல்லா…? கோபி சார் நீங்க காலி தான் போலயே..!

சீதா, சரி ஸ்ருதிக்கு கையெழுத்து போட்டுடுவேன். உனக்கு யாரு போடுவா எனக் கேட்கிறார். நான் ஒரு முக்கியமான ஆளை கூட்டிட்டு வருகிறேன் எனக் கூறுகிறார். மீனாவுக்கு கால் செய்த முத்து உன் சாப்பாடு சாப்பிட்டு எனக்கு வேற சாப்பாடு செட்டே ஆகல. காரில் தான் தூங்குகிறேன் எனக் கூற மீனா வருத்தப்படுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top