Cinema News
அப்புறம் என்னங்க அவரே சொல்லிட்டாரே… விஜய்க்காக இறங்கி வந்த சூப்பர்ஸ்டார்..! ஷாக்கான ரசிகர்கள்..!
Vijay Rajini: விஜயிற்கும், ரஜினிக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. அதே நேரத்தில் டாப் ஹிட் நட்சத்திரங்கள் இருவருமே எதையுமே யோசிக்காமல் அவர்கள் நடிப்பில் பிஸியாக இருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. த்ரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், மிஷ்கின் என கூட்டணியே வித்தியாசமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வாடகைக்கு பேரம் பேசிக்கொடுத்த சூப்பர்ஸ்டார்… பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெருமிதம்!
ஏற்கனவே விஜய் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு நிலவும். ஆனால் இந்த முறை சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தால் மேலும் பரபரப்பு நிலவுகிறது. இதில் முதல் ஆளாக களத்தில் இறங்கிய ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் 700 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அவர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் காக்கா, கழுகு கதையை சொன்னதும் விஜயை தான் மறைமுகமாக சாடுகிறார் என சிலர் விமர்சித்தனர். அதனால் கண்டிப்பாக லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் எதுவும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடியோ ரிலீஸ் ரத்தானது.
அவரும் வாயையே திறக்கவில்லை. இதனால் லியோ படம் பதிலடி கொடுக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன் வியாபாரமே 400 கோடி வரை ஆகி இருக்கிறது. ரிலீஸுக்கு கண்டிப்பாக 1000 கோடியை நெருங்கும் என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீட் டேமேஜ் ஆனத கூட மன்னிச்சுடுவேன்! அதையும் மீறி ஒன்னு பண்ணாங்க! ரோகினி தியேட்டருக்கு விஜயிடமிருந்து பறந்த கால்
இந்நிலையில், திருநெல்வேலியில் தன்னுடைய 170வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் லியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிராத்திப்பதாக சொல்லி சென்றார். சண்டை போட்டுக்கு இருக்கவும் பாவமில்லையா தலைவரே!