சீட் டேமேஜ் ஆனத கூட மன்னிச்சுடுவேன்! அதையும் மீறி ஒன்னு பண்ணாங்க! ரோகினி தியேட்டருக்கு விஜயிடமிருந்து பறந்த கால்

Rohini Theatre vs Vijay : விஜயின் நடிப்பில் நாளை மறுநாள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமான லியோ வெளியாகிறது. இந்த ஒரு நாளைக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பது போல் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடப்படும் திருவிழாவாக அந்த நாள் அமைய இருக்கிறது.

மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவிற்கு லியோ படம் ஏற்படுத்துமா இல்லையா என்பதை இரண்டு நாள்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கெல்லாம் முன்னோட்டமாக ரோகிணி தியேட்டரில் நடந்த அசம்பாவிதத்தையும் யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: ஷாருக்கானுடன் நடிக்க கறார் கண்டிஷன் போட்ட கட்டப்பா!.. நடிகர்லாம் இவர்கிட்ட கத்துக்கோங்கப்பா!…

இந்த நிலையில் ரோகினி தியேட்டரின் உரிமையாளர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்னும் டேமேஜ் ஆன சீட்டுகளெல்லாம் சரிசெய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் விஜய் ரசிகர்கள் தான் இப்படி செய்தார்களா என்று சொல்ல முடியாது. வேறு ரசிகர்களாக கூட இருக்கலாம். ஏனெனில் விஜய் ரசிகர்களை தளபதி மிகவும் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். அதனால் அவர்கள் இவ்வாறு செய்யக் கூடியவர்கள் அல்ல, மக்கள் பண்ண தப்புக்கு தளபதி என்ன செய்ய முடியும் என கூறினார்.

இதையும் படிங்க: எல்லாத்தையும் சொல்லப் போறேன்! புது அவதாரம் எடுத்து வச்சி செய்யப் போகும் நடிகை – இது வேற ரகம்

மேலும் ரசிகர்கள் அவ்வாறு பண்ணும் போது தியேட்டர் சம்பந்தப்பட்டவர்கள் மைக்கில் எச்சரிக்கை செய்து கொண்டுதான் இருந்தார்களாம். ஆனால் சந்தோஷத்தில் ரசிகர்கள் யாரும் கேட்கிற மன நிலையிலேயே இல்லை என்று கூறினார்.

தியேட்டரில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் சீட்டை சேதப்படுத்திவிட்டு அந்த சீட்டிலேயே படுத்துக் கொண்டு செல்ஃபி வேறு எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறினார். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தளபதி என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

இதையும் படிங்க: கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க மன்சூர் அலிகான் செஞ்ச வேலை!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..

அப்போது எதாவது ரசிகர்களுக்கு அடி எதும் பட்டிருக்கிறதா? எந்தளவுக்கு சேதமடைந்திருக்கிறது என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டார் என்றும் ரோகினி தியேட்டர் உரிமையாளர் கூறினார்.

 

Related Articles

Next Story