ஆல் ஷோ ஹவுஸ்புல்!.. ரீ ரிலீஸிலும் கல்லா கட்டும் வட சென்னை!.. இவ்வளவு கூட்டமா?!…

Published on: October 16, 2023
dhanush
---Advertisement---

Vadachennai: தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த வெகு சில நடிகர்களில் தனுஷும் ஒருவர்.

ஒருபக்கம் நல்ல கதையம்சம் உள்ள நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களிலும், ஒருபக்கம் கமர்சியல் மசாலா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கியவர் இவர். இப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் படங்களும் பேன் இண்டியா படமாக உருவாகி வருகிறது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்துமுடித்துவிட்டு அவரின் 50வது திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: உண்மையிலேயே கர்ணனாகவே மாறிய தனுஷ்! இரவு பகல் பார்க்காமல் அண்ணனுக்காக துணிந்து இறங்கிய சம்பவம்

தனுஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான புதுப்பேட்டை, ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. அதேபோல், தமிழ் சினிமாவில் வெற்றிமாறனும் ஒரு முக்கிய இயக்குனராக கருதப்படுகிறது. அவரின் இயக்கத்தில் வெளிவரும் படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெற்றிமாறன் – தனுஷ் இணைந்து உருவான வடசென்னை திரைப்படம் தமிழகத்தில் சில திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சென்னை கமலா தியேட்டரில் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த சனி ஞாயிறு இரண்டு நாளும் இரண்டு தியேட்டர்களிலும் 5 காட்சி திரையிடப்பட்டு ஹவுஸ்புல் ஆகியுள்ளது. மேலும் அட்வான்ஸ் புக்கிங்கில் வருகிற 18ம் தேதி எல்லா டிக்கெட்டுகளும் புக் ஆகிவிட்டதாம்.

இதையும் படிங்க: கோடி கோடியா கல்லா கட்றாங்கப்பா!.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த தனுஷ் 50!..

சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சசிக்குமார் முதன் முதலில் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று கல்லா கட்டியது. அதேபோல், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வடசென்னை இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது. ஆனால், அது எப்போது துவங்கும் என்பது வெற்றிமாறனுக்கே வெளிச்சம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை மனதில் வைத்து தனுஷ் பேசிய அந்த வசனம்! இதுவரைக்கும் யாரும் நோட் பண்ணாத விஷயம்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.