கோடி கோடியா கல்லா கட்றாங்கப்பா!.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த தனுஷ் 50!..
Actor dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தற்போது 50வது படத்தை நெருங்கிவிட்டார். ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும், ஒருபக்கம் நல்ல கதையம்சம் உள்ள, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் நடித்து வருகிறார்.
ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றவர் இவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஹாலிவுட், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷ் என்றால் தெரியுமளவுக்கு பேன் இண்டியா அளவில் சிறந்த நடிகராக தன்னை மெருகேற்றிக்கொண்டவர் இவர்.
இதையும் படிங்க: அவர் கதையை எடுத்தா மனுசன் என்னெவெல்லாம் பண்ணுவாரோ!.. தப்பிப்பாரா தனுஷ்?!..
புதுப்பேட்டை, பொல்லாதவன், வட சென்னை, ஆடுகளம், அசுரன், கர்ணன் என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர். கேப்டன் மில்லர் படத்திலும் அசத்தலான லுக்கில் நடித்துள்ளார். அப்படத்தை முடித்த தனுஷ் தற்போது அவரின் 50வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதை வட சென்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: போயஸில் மாளிகை கட்டினால் கூட நிம்மதி இல்லாமல் தவிக்கும் தனுஷ்… ஐஸுக்காக உருகுகிறாரா?
ஒருபக்கம் இப்படத்தின் வியாபாரங்கள் இப்போதே துவங்கிவிட்டது. ஓவர் சீஸ் எனப்படும் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை மட்டும் ரூ.9.5 கோடிக்கு விலை போயுள்ளது. அதன்பின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சேட்டிலைட் உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை, மற்ற மொழி உரிமைகள் என அனைத்தையும் சேர்த்தால் இப்படம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகும் என சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் இதுவரை எந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமையும் இவ்வளவு விலைக்கு போனதில்லை என சொல்லப்படுகிறது. சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி ஆகியோர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே, இப்படம் கண்டிப்பாக தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை மனதில் வைத்து தனுஷ் பேசிய அந்த வசனம்! இதுவரைக்கும் யாரும் நோட் பண்ணாத விஷயம்