70களின் இறுதியில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இளையராஜா. ராஜாவின் கிராமத்திய இசை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. கிராமத்து மனிதர்களின் வாழ்வு, காதல், கோபம், பிரிவினை என எல்லாவற்றையும் தனது இசையில் கொண்டுவந்தார் ராஜா.
ஒருகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறிய இளையராஜாவை நம்பியே 80களில் பல படங்கள் உருவானது. அவரும் தனது இசையால் பல படங்களை தனது இசையால் ஓட வைத்தார். இப்போது வரை அவரைப்போல் பின்னணி இசை அமைக்கும் இசையமைப்பாளர் யாரும் இல்லை.
இதையும் படிங்க: இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!
அதேநேரம் இளையராஜாவை சர்ச்சையையும் பிரிக்கவே முடியது. டக்கென கோபத்தை காட்டிவிடுவார். இயக்குனர் மீது கோபம் வந்துவிட்டால் இனிமேல் உங்கள் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிடுவார். இப்படித்தான் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் என பலருடன் சண்டை போட்டார். பாட்ஷா படம் உருவானபோது ரஜினியிடம் கூட சண்டை போட்டார். அதன்பின் இப்போதுவரை அவர் ரஜினி படத்திற்கு இசையமைக்கவில்லை. மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் கூட ரஹ்மான் பக்கமே செல்கிறார்கள்.
இந்நிலையில்தான், ராஜாவின் தீவிர ரசிகரும், பாலிவுட்டில் படங்களை இயக்கி வரும் பால்கி ராஜாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதில், தனுஷ் நடிக்கவுள்ளார். இங்குதான் பிரச்சனை இருக்கிறது. தான் இசையமைக்கும் படத்திலேயே காட்சிகளில் சில மாற்றங்களை சொல்வார் இளையாராஜா.
இதையும் படிங்க: இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜா பற்றி மாரிமுத்து ஃபீலிங் காட்டிய தருணம்…
பல வருடங்களுக்கு முன் அகில இந்திய இளையராஜா ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் கூட அந்த மன்றம் இயங்கவில்லை. இளையராஜா கோபப்பட்டு கத்தியதில் அந்த மன்றத்தை கலைத்துவிட்டு ஓடிவிட்டனர். இப்போது அவரின் வாழ்க்கை கதையை படமாக எடுத்தால் அவர் என்னென்ன ஆட்சேபம் தெரிவிப்பார்… எதையெல்லாம் மாற்ற சொல்வார் என்பது தெரியாது. மேலும், எடுத்த சில காட்சிகளை வெட்ட சொல்லவும் வாய்ப்பிருப்பிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி இயக்குனர் எப்படி படத்தை முடித்து வெளியிடுவார் என்பது தெரியவில்லை. இந்த படம் எடுக்கப்படும் போதுதான் பல களோபரங்கள் வெடிக்கும் என திரையுலகில் சொல்லப்படுகிறது.
நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 5 வருஷமா குப்பை கொட்டியும் கண்டுக்காத இளையராஜா – கைகொடுத்து தூக்கிய இசைப்புயல்