இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜா பற்றி மாரிமுத்து ஃபீலிங் காட்டிய தருணம்...
மாரிமுத்து தமிழ் சினிமா இயக்குனர் ஆவார். இவர் தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டும் இல்லாமல் இவர் பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
வாலி,உதயா, கடைகுட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன்2 திரைப்படத்திலும் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆதிகுணசேகரனை அடக்கி வாசினு சொன்னா அடுக்குமா? மாரிமுத்து நடிக்க இருந்த மற்றுமொரு சீரியல் எதுனு தெரியுமா?
இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலை சின்னத்திரை இயக்குனரான திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
இந்த சீரியலில் இவரின் நடிப்புக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தாம்மா ஏய் என இவரின் வசனம் மிகவும் பிரபலமானதாகி விட்டது. இப்படி மக்கள் மனதை கொள்ளை அடித்த இவர் கடந்த வாரம் மாரடைப்பால் இறந்து ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்திவிட்டார். இவரது மறைவிற்கு அனைத்து பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வாய் ஓவரா தான்… ஆனா இந்த விஷயத்துல இளையராஜாவ அடிச்சிக்கவே முடியாது…
இவர் பொதுவாக அனைத்து பிரபலங்களுடனும் பணியாற்றி உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இளையராஜாவை பற்றிய தனது கருத்தினை மிக அழகாக பதிவிட்டார். ஒரு முறை இவர் படபிடிப்பினை முடித்து செல்லும் போது திருச்சியை தாண்டி டோல்பூத்தில் கட்டணம் செலுத்தும் போது வெளியே இறங்கி சற்று நடந்து கொண்டிருந்தாராம்.
அப்போது அவருக்கு வலபுறமும் இடபுறமும் நின்று கொண்டிருந்த கார்கள் அனைத்திலும் இளையராஜாவின் பாடல்கள் ஒலிப்பதை கேட்டுள்ளார். இதனை கேட்டு மெய்சிலிர்த்து இவர் இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் இளையராஜாவின் பாடல்களை கேட்பார்கள் என பெருமிதம் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ஆதி குணசேகரனுக்கு இவர்கிட்டதான் பேசுறாங்களாம்!.. அப்போ இனி சீரியல் தீயாய் இருக்குமே!.
மேலும் இவரின் தாயின் காலை தொட்டு தான் கும்பிட வேண்டும் எனவும் சினிமாவில் வசனங்கள் பேசும் ஆனால் இவரோ இசையால் பேச வைத்தவர் எனவும் இளையராஜாவிற்கு புகழாராம் சூட்டியுள்ளார். மேலும் இவரை வைரமுத்து ”கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டு காற்று உன் குத்தகையிலே இருக்கிறது” என குறிப்பிட்டதை சுட்டி காட்டினார்.