அத நானே எதிர்பாக்கல!.. தலைவர் 171 படம் உருவானது இப்படித்தான்!.. ரகசியம் சொன்ன லோகேஷ்..

Published on: October 17, 2023
---Advertisement---

Rajinikanth 171: ரஜினிகாந்தின் 170 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் 171வது படத்தின் அப்டேட்டினை தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் செம குஷியாகி இருக்கிறார்கள்.

விஜயின் லியோ படத்தின் ஷூட்டிங்கினை முடித்த லோகேஷ் கனகராஜ் ஒற்றை ஆளாக ப்ரோமோஷனுக்குள் இறங்கி விட்டார். தயாரிப்பு நிறுவனம் ரொம்ப ரிஸ்க்கே இல்லாமல் இருப்பதை பார்த்து காண்டானவர். கிடைக்கும் எல்லா சேனல்களுக்கும் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார். அதில் லியோ குறித்தும் தன்னுடைய சினிமா கேரியர் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதையும் படிங்க: டிரெஸ் வாங்க போய் பாதி கடையை அள்ளி போட்ட எதிர்நீச்சல் கரிகாலன்: வைரலாகும் ஷாப்பிங் வீடியோ

அதில் பிஸ்மிக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கேரியர் குறித்து ரஜினிகாந்துடன் அவர் இணைய இருக்கும் 171 படம் பற்றியும் நிறைய பேசி இருக்கிறார். அதில் இருந்து, ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா கேரியரை லோகேஷுடன் நடித்து விட்டு முடிக்க வேண்டும் என அவர் எண்ணியதாக ஒரு தகவல்கள் உலா வந்தது. இது உண்மையா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த லோகேஷ், இல்லவே இல்லை. ரஜினிகாந்த் படம் நடந்தது எதேர்ச்சையாக நடந்தது தான். ஒருநாள் லியோ படப்பிடிப்பில் நானும், அனிருத்தும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போ அனிருத் நீ சொன்ன ஒரு கதையை ரஜினி சாரிடம் சொன்னா எப்படி இருக்கும் எனக் கேட்டார். நான் அதெல்லாம் சாத்தியமா என்றேன்.

ஏன் லேட் செய்யணும் என அனிருத்துடன் அடுத்த நாளே போயஸ் வீட்டுக்கு போய் கதையை சொன்னேன். அவரும் நல்லா இருக்கே என ஆச்சரியப்பட்டார். அந்த கதை எல்.சி.யூவுடன் தொடர்பே இல்லை. எனக்கும், ரஜினி சாருக்குமே இது ஒரு புது முயற்சியாகவே இருக்கும் எனத் தெரிவித்தார் லோகேஷ்.

இதையும் படிங்க: ஏழெட்டு இடத்துல தையலு! இதுல எதுக்கு உனக்கு ஸ்டைலு – தல பற்றி ரத்னகுமார் போட்ட பதிவால் ரஜினி171க்கு வந்த சிக்கல்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.