சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம்தான்! ரவுண்டு கட்டி அடிக்க தயாராகிட்டாங்க – புதுசா இன்னொரு பிரச்சினையா?

Published on: October 17, 2023
karthi
---Advertisement---

Sivakarthikeyan Ayalaan : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக அறியப்பட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் ஒட்டுமொத்த புகழையும் ஓவர் நைட்டில் டேமேஜ் செய்து விட்டார் இசையமைப்பாளர் இமான். அந்த பிரச்சினை ஒரு பக்கம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான் திரைப்படத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது.

வரும் பொங்கல் என்று அயலான் திரைப்படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. அதுவும் சோலோவாக படம் ரிலீஸ் ஆவதால் தமிழ்நாடு  தியேட்டரிக்கல் உரிமை மட்டும் 50 கோடி வரை கலெக்‌ஷனை அள்ளும் என்று சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: ப்ளீஸ் விட்ருங்க!.. வீட்ல பிரச்சனை வரும்!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்?!..

இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பொங்கல் ரிலீஸாக அயலான் திரைப்படத்தோடு விக்ரம் நடிப்பில் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான தங்கலான் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும் சில செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தங்கலான் திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்க ஞானவேல் ராஜாதான் படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை இருந்ததாம்.

இதையும் படிங்க: படுக்க வச்சே எடுக்குறான்! ஒரு வேளை தப்பான படத்துல நடிக்கிறோமோ? ராதாரவியை பயமுறுத்திய அந்த படம்

அதை கருத்தில் கொண்டே எப்படி 50கோடியை மொத்தமாக அள்ள விடுவேன் என்று நினைத்துக் கொண்டு தங்கலான் திரைப்படத்தை எப்படியாவது பொங்கலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறாராம் ஞானவேல் ராஜா.

இதற்கிடையில்  லால்சலாம் படமும் பொங்கல் ரிலீஸ் என்று தான் சொல்லப்பட்டது. அதே போல் பாலாவின் வணங்கான் திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. அதனால் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் எல்லாம் அயலான் திரைப்படத்தோடு மோதும் நிலையில் எப்படி தியேட்டரிக்கல் உரிமை 50 கோடியை எட்டும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.