Connect with us
imaan

Cinema News

ப்ளீஸ் விட்ருங்க!.. வீட்ல பிரச்சனை வரும்!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்?!..

Sivakarthikeyan Vs Imaan:  நேற்று இரவில் இருந்து கோடம்பாக்கத்தையே கதிகலங்க வைத்திருக்கிறது இமான் , சிவகார்த்திகேயன் பற்றிய செய்தி. ஏற்கனவே பிரபல யுடியூப் சேனலில் இதை பற்றி நாசுக்காக சொல்லியிருந்த நிலையில் நேற்று திடீரென இமான் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது சிவகார்த்திகேயன் எனக்கு மறக்கமுடியாத துரோகத்தை செய்து விட்டதாகவும் இந்த ஜென்மம் மட்டுமில்லை அடுத்த ஜென்மத்திலும் அவருடன் கூட்டணி என்பதே இல்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:படுக்க வச்சே எடுக்குறான்! ஒரு வேளை தப்பான படத்துல நடிக்கிறோமோ? ராதாரவியை பயமுறுத்திய அந்த படம்

மனம்கொத்திபறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களுக்கு இமான் தான் இசையமைத்திருந்தார். ஒரு வகையில் சிவகார்த்திகேயனின் ஆரம்பகால படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறக் காரணமாக இருந்தது இமானின் இசையில் அமைந்த பாடல்களும் தான்.

சினிமாவையும் தாண்டி சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் இடையே நல்ல நெருக்கமான நட்பும் இருந்ததாம். ஆனால் தனக்கு சிவகார்த்திகேயன் இப்படி ஒரு துரோகத்தை செய்வார் என்று கொஞ்சம் கூட நினைக்க வில்லை என்றும் அதை பற்றி சிவகார்த்திகேயனிடமே கேட்டேன் என்றும் ஆனால் என்ன நடந்தது என்பதை தன்னால் விளக்கமாக சொல்ல முடியாது என்றும் இமான் கூறினார்.

இதையும் படிங்க: விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…

இதற்கிடையில் இந்த செய்தி இணையத்தில் வைரலானதும் இதை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய டெக்னிக்கல் டீமை அழைத்து இந்த செய்தி மேலும் டிரெண்டிங் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு உடனடியாக இமானுக்கு தொலைபேசியில் அழைத்தாராம். அதில் தயவு செய்து அந்த வீடியோவை அழிக்க சொன்னதாகவும் என் வீட்டார் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சொன்னாராம்.

இதையும் படிங்க: அத நானே எதிர்பாக்கல!.. தலைவர் 171 படம் உருவானது இப்படித்தான்!.. ரகசியம் சொன்ன லோகேஷ்..

ஆனால் ‘இந்தப் பக்கம் எந்தளவு நான் பாதிக்கப்பட்டிருப்பேன்?.. அதனால் என்னால் அப்படி செய்ய முடியாது . கடவுள் பார்த்துக் கொள்வான்’ என்று இமான் கூறிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top