Connect with us
lokesh

Cinema News

லோகேஷ் கனகராஜிடம் ரஜினி கேட்ட முதல் கேள்வி!.. அட இவ்வளவு நடந்திருக்கா?!..

Thalaivar 171 : 90 மற்றும் 2K கிட்ஸ்களால் கொண்டாடப்படும் இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் அவர் தொடும் கதை மற்றும் திரைக்கதையில் அவர் செய்யும் மேஜிக்தான்.. அவர் தங்களுக்கு ஒரு புதிய உலகை காட்டுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

அதனால்தான் அவர் இயக்கும் படங்களை LCU (Lokesh Cinematic Universe) என அழைக்கிறார்கள். மாநகரம் படம் மூலம் இயக்குனரான லோகேஷ் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என டேக் ஆப் ஆனார். குறுகிய காலத்திலேயே விஜய், கமல், ரஜினி என பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குனராக அவர் மாறியதுதான் ஆச்சர்யம்.

இதையும் படிங்க: கள்ள உறவு காரணமில்லை!.. விவாகரத்து பஞ்சாயத்து.. டி. இமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

விஜயை வைத்து லியோ படத்தை முடித்துள்ள லோகேஷ் அடுத்து ரஜினியின் 171வது திரைப்படத்தை இயக்கப் போகிறார். ரஜினி இப்போது தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தபின் அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் படம் உருவாவதற்கு முன்பே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாகவும், ரஜினி தயக்கம் காட்டியதால் கமலையே வைத்து லோகேஷ் விக்ரம் படத்தை இயக்கியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘ரஜினி சாருடன் எனக்கு 3 சந்திப்பு நடந்தது. சில கதைகளை சொன்னேன். அதில் சில விஷயங்கள் அவருக்கு செட் ஆகவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…

ஒருநாள் லியோ படப்பிடிப்பில் அனிருத்துடன் பேசிக்கொண்டிருந்த போது நான் முன்பு சொன்ன ஒரு கதையை பற்றி பேசிய அனிருத் ‘இதை ரஜினி சாரை வைத்து பண்ணினால் என்ன?’ என கேட்டார். அவர் எப்படி இதில் நடிப்பார்? எனக்கேட்டேன். ‘முயற்சி செய்து பார்ப்போம்’ என சொல்லி அவர் தரப்பில் பேசினார். முதல்நாள் இரவு சொல்லி, அடுத்து நாள் காலையில் நானும் அவரும் ரஜினியின் வீட்டிற்கு சென்றோம். என்னை பார்த்ததும் ரஜினி சார் ‘என்ன புதுசா?’ எனக்கேட்டார்.

அதாவது ‘ஏற்கனவே நீ சொன்ன கதைகளைத்தான் கேட்டுவிட்டேனே!. இப்போது மறுபடியும் என்ன?’ என்கிற மாதிரி இருந்தது அவரின் கேள்வி. அதன்பின்னர்தான் நான் இந்த கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. ‘அட நல்லாருக்கே.. இதை பண்ணலாமே’ என உற்சாகமாகிவிட்டார். அப்படித்தான் தலைவர் 171 புராஜெக்ட் துவங்கியது. எல்லாம் ஒரே நாளில் நடந்துமுடிந்துவிட்டது. அதை நானே எதிர்பார்க்கவில்லை’ என லோகேஷ் கூறியிருந்தார்.

மேலும், ரஜினி சாரை வைத்து நான் இயக்கவுள்ள படதில் எல்.சி.யூ-வெல்லாம் இருக்காது. அது ஒரு தனிக்கதை. என்னை பொறுத்தவரையில் அது ஒரு பரிசோதனை முயற்சிதான்’ என லோகேஷ் கூறினார்.

இதையும் படிங்க: அத நானே எதிர்பாக்கல!.. தலைவர் 171 படம் உருவானது இப்படித்தான்!.. ரகசியம் சொன்ன லோகேஷ்..

google news
Continue Reading

More in Cinema News

To Top