இந்திய சினிமாவின் ஐகானாகவே மாறிய லோகேஷ்! லியோவில் அவர் வாங்கிய சம்பளம் தெரியுமா?

Published on: October 18, 2023
loki
---Advertisement---

Lokesh kanagaraj Salary: தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமெர்ஷியல் படங்களை கொடுத்து இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் லோகேஷ். தான் எடுக்கும் ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

நடிகர் விஜயின் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் நாளை வெளியாகும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் பல  மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே விஜயின் படங்கள் சமீபகாலமாக கலெக்‌ஷனை அள்ளி வரும் நிலையில் இது லோகேஷ் படம் என்பதாலும் அதிகளவு வசூலை அடையும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: அட ஒன்னு விட்டா இன்னொன்னு…! கணேஷுக்கு ப்ரேக்கு..! அடுத்து மாலினி தானே!

லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த லியோ திரைப்படத்தின் மீதும் அதிகளவும் எதிர்பார்ப்பு இருக்கிறது.ஏற்கனவே லோகேஷும் விஜயும் இணைந்து மாஸ்டர் என்ற பக்கா கமெர்ஷியல் ஹிட் கொடுத்த கூட்டணி.

இந்த நிலையில் லியோ படத்தில் நடிகர்கள் நடிகைகள் வாங்கிய சம்பளம் மற்றும் லோகேஷின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. விஜய் லியோ படத்திற்காக 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: இலவு காத்த கிளி போல மாறிய பிரசாந்த்! ‘அந்தகன்’ படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

அதே போல் த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் 5 கோடி சம்பளமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் லோகேஷ்.இவர் வாங்கிய சம்பளம் பற்றி தெரியவேண்டாமா?

இந்தப் படத்தில் லோகேஷுக்கு 30 லிருந்து 35 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. லியோ படம் மட்டும் வெளியாகி நினைத்ததை விட பெரிய அளவில் ஹிட் கொடுக்குமேயானால் அடுத்ததாக ரஜினியுடன் லோகேஷ் இணையும் ரஜினி171 படத்தில் அவருக்கான சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: எதிர்நீச்சலுக்கு வரும் புது வில்லன்… ஆக மொத்தம் ஒன்னும் உருப்புடுறாப்ல தெரியல…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.