Connect with us
leo

Cinema News

லியோவுக்கு லீவு விட்ட ரோகிணி!.. சீட்ட உடைச்சதெல்லாம் கண் முன்னாடி வந்து போகும்ல!…

Leo release: சென்னையை பொறுத்தவரை ரசிகர்கள் திரைப்படம் பார்க்க ரசிகர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி காம்பளக்ஸைத்தான். குறிப்பாக விஜய், அஜித் படங்கள் வெளியானால் ரசிகர்களின் முதல் சாய்ஸ் அந்த தியேட்டர்தான். விஜய், அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் அங்குதான் களைகட்டும்.

இதனால், முன்பதிவு டிக்கெட்டுகள் அங்கு அதிகமாக விற்கப்பட்டும். விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது இளைஞர்கள் கூட்டமும் இங்கே அதிகமாக கூடும். பேனர் கட்டுவது, கட் அவுட வைப்பது, பால் அபிஷேகம் செய்வது, பீர் அபிஷேகம் செய்வது என புதிய படங்கள் வெளியானால் இங்கே களை காட்டும்.

இதையும் படிங்க: ‘லியோ’ பட ரிலீஸ் நேரத்தில் லோகேஷ் எடுத்த தில்லான முடிவு! இனிமேலாவது அடங்குவாங்களானு பார்ப்போம்

அதேநேரம், துணிவு படம் வெளியானபோது அதிகாலை காட்சியில் ரசிகர் ஒருவர் அந்த பக்கம் வந்த லாரியின் மீது ஏறி கீழே விழுந்து மரணமடைந்தார். எனவே, காவல்துறை சார்பில் அந்த தியேட்டருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. லியோ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

லியோ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியான போது ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. அப்போது இருக்கைகளின் மீது ஏறி நின்று விஜய் ரசிகர்கள் அடித்த கூத்தில் பல இருக்கைகள் சேதமடைந்தது. இதனால், தியேட்டர் நிர்வாகத்துக்கு 8 லட்சம் வரை நஷ்டம் ஆனதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: சஞ்சய் தத்துக்கே இந்த நிலைமைனா!.. திரிஷாவுக்கு?.. லியோ படத்தில போய் இப்டி செஞ்சிட்டீங்களே?

இந்நிலையில், ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சி தொடர்பாக இழுபறி நீடித்து வந்ததால் முன்பதிவு துவங்கப்படாமலேயே இருந்தது. ஒருபக்கம், வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே வருமானத்தை பிரித்து கொள்ளும் சதவீதத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.

rohini

இதனால் ரோகிணி தியேட்டர் நிறுவனம் லியோ படத்தை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். தியேட்டரின் முன்புறம் ‘லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படாது’ என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய அங்கு சென்ற விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: எல்லா கோட்டையும் அழிங்க… இதுதான் ஃபைனல்.. ஒருவழியாக அறிவித்த லியோ படக்குழு..!

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top