எஸ்.ஏ.சி சொன்னாருனுதான் போனேன்! ‘பாட்ஷா’ பட இயக்குனருக்கே தண்ணி காட்டிய விஜய்!

Published on: October 18, 2023
suresh
---Advertisement---

Suresh Krishna: கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே ஒரு மாஸான கமெர்ஷியல் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாட்ஷா  படத்தை யாராலும் மறக்க முடியுமா? அதே போல் கமலின் சத்யா படமும் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்றாக இருக்கிறது.

சத்யா படத்தில் கமல் ஒரு ரக்டு பாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.கிட்டத்தட்ட 40 ஆண்டுகால சினிமாவில் இருந்த சுரேஷ் கிருஷ்ணா இப்போது சின்னத்திரையில் சில தொடர்களை இயக்கி கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ப்ப்பா!. குட்ட கவுன்ல சும்மா செம தக்காளி!. வாலிப பசங்க மனச கெடுக்கும் விஜே பார்வதி….

அதே சமயம் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா விஜயை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். அதாவது ரஜினி, கமலின் ஆரம்பகால படங்களில் இப்போதுள்ள எந்த நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதில் அண்ணாமலை படத்தில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் அந்தப் படத்தை பார்த்து சினிமாவிற்குள் வந்தவர்தான் விஜய் என்றும் கூறி அவருக்காக டபுள் ஆக்ட் சப்ஜெக்ட்டில் ஒரு படம் வைத்திருந்தேன் என்று சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.அதாவது அண்ணாமலை படத்தின் போது எஸ்.ஏ.சி விஜயை சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அறிமுகம் செய்து ‘இவன் கூடிய சீக்கிரம் நடிக்க வருவான். நீங்கள்தான் அவனுக்கு சப்போர்ட்டா இருக்கனும்’ என்று சொல்லி அறிமுகம் செய்து வைத்தாராம்.

இதையும் படிங்க: ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..

அந்த சமயத்தில் விஜய் இந்தளவுக்கு பெரிய இடத்தை வருவார் என்று தெரி்யாது என்றும் எஸ்.ஏ.சி சொன்னதும் கண்டிப்பாக பண்ணலாம் சார்  என்று சுரேஷ் கிருஷ்ணாவும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு கவிதாலயா புரடக்‌ஷனில் விஜயை வைத்து டபுள் ஆக்ட் ரோலில் ஒரு படம் சுரேஷ் கிருஷ்ணாவை வைத்துதான் எடுக்க திட்டமிட்டார்களாம். அது ஹிந்தியில் வெளியான கரன் அர்ஜூன் படத்தின் ரீமேக்காம். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் அப்படியே விடப்பட்டதாம்.

அதன் பிறகு ஒரு பவர் ஃபுல்லான கதையை எஸ்.ஏ.சியிடம் போய் சொல்லியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.அவருக்கு பிடித்துப் போக விஜயிடம் போய் சொல்லுங்கள் என எஸ்,ஏ.சி சொல்ல இவரும் விஜயிடம் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: லியோ படுத்திய பாடு!. பெத்த புள்ளையையே பயம்காட்டிய சாண்டி மாஸ்டர்!..

ஆனால் அப்போது விஜய்க்கு 30லிருந்து 35 வயது இருக்குமாம். அதனால் இந்த சின்ன வயசில் இவ்வளவு பெரிய ரோல் எடுத்து நடிப்பது சவாலானது என சொல்லி மறுத்துவிட்டாராம். ஆனால் பின்னாளில் பிகில் திரைப்படத்தில் ஒரு வயதான கேரக்டரில் நடித்திருந்தார் விஜய் என சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.