
Cinema News
16 வயதில் ராஜ்கிரண் எடுத்த முடிவு!. விஜயகாந்துக்கு முன்னாடியே அப்படி யோசிச்ச மனுஷன் இவர்தான்!…
Published on
By
Actor Rajkiran: தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக தனது கேரியரை துவங்கியவர் ராஜ்கிரண். அப்போது அவரின் பெயர் மொய்தீன் அப்துல் காதர். திரையுலகில் எல்லோரும் இவரை மொய்தீன் பாய் என அழைப்பார்கள். சைக்கிளில் திரைப்பட பொட்டியை எடுத்துக்கொண்டு தியேட்டார்களில் போய் கொடுப்பார்.
சினிமா உலகில் சின்ன சின்ன வேலைகள் செய்து படிப்படியாக முன்னேறினார். ராமராஜனை வைத்து ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் இவர். என்ன பெத்த ராசா படத்திற்கு கதையும் இவர்தான். அதன்பின் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘என் ராசாவின் மனசிலே’ என்கிற படத்தை தயாரித்தார்.
இதையும் படிங்க: 22 முறை மோதிய விஜயகாந்த் – கமல்ஹாசன் படங்கள் : அதிக ஹிட் கொடுத்தது யார் தெரியுமா?…
இந்த படத்தில் ராமராஜன் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்காமல் போக ராஜ்கிரணே ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். இந்த படத்தில்தான் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன் ராஜ்கிரணின் அலுவலகத்தில் ஆபிஸ் பாய் ரேஞ்சுக்கு வடிவேலு வேலை செய்து வந்தார்.
அந்த படம் ஹிட் அடித்ததால் ராஜ்கிரண் தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் குணச்சித்திர நடிகராக மாறி பல படங்களிலும் நடித்தார். நந்தா, பாண்டவர் பூமி, கோவில், சண்டக்கோழி, சேவல், முனி என பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ராஜ்கிரண் ‘ ராமநாதபுரம் கீழக்கரை எனது சொந்த ஊர். 15 வயது வரை என் அம்மா என்னை பணக்கார பிள்ளை போல வளர்த்துவிட்டார். எனக்கு அப்போது அது தெரியவில்லை. 16 வயதில் வேலை தேடி சென்னை வந்தபோதுதான் எனக்கு அது புரிந்தது. இங்கே பலரும் ஊரை விட்டு வந்து சாப்பாடுக்கே வழியில்லாமல் பட்டினி கிடப்பதை பார்த்தேன்.
எனவே, நான் பணம் சம்பாதிக்கும்போது என் நிறுவனத்தில் பணிபுரியும் எல்லோருக்கும் நான் என்ன சாப்பிடுகிறேனோ அதை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதை செய்தும், காட்டினே’ என அவர் கூறினார். சினிமாவில் படப்பிடிப்பில் உணவில் பாகுபாடு இருந்ததை பார்த்த நடிகர் விஜயகாந்த் ‘எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு என்ற பழக்கத்தை கொண்டுவந்தார். ஆனால், அவருக்கு முன்பே ராஜ்கிரண் இதை யோசித்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்தான்.
இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் பொய் சொல்லி வசமாக சிக்கிய வீரபத்ரன்! வாங்கிய அடியை மறக்க முடியுமா?
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...