Cinema News
அந்தப் பட வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கா? உண்மையான ஹீரோ இவர்தான் – என்னாச்சு தெரியுமா?
Ayoti : சினிமாவில் எப்படியாவது சாதிக்கவேண்டும் என பல பேர் தன் சொந்தங்களை விட்டு சொந்த ஊர்களை விட்டு ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு புதிய இடத்தில் நுழைந்து சிரமப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகி அதிலிருந்து மீண்டு ஒரு சில பேர்தான் தான் கொண்ட லட்சியங்களை அடைய முடிகிறது.
அதிலும் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே யோசிக்கிறார்கள். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை கொடுத்து அதிகளவு கவனத்தை ஈர்த்த திரைப்படம் தான் அயோத்தி. இதுவரை இந்த மாதிரியான கதையை யாரும் எடுத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! லியோவில் சஸ்பென்சாகவே இருந்த அந்த பிரபலம் – இவரிடம் இப்படியொரு அவுட்புட்டா?
தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு மொழி தெரியாத ஊருக்கு வந்த ஒரு குடும்பம். எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கி தன் மனைவியை இழக்கும் அந்த கணவன். மனைவியின் உடலை தன் ஊர் வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்வதற்காக வந்த இடத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அவன் படும் தவிப்பு.
இவர்களுக்கு உதவ மனிதாபிமான ஒரு நல்ல மனதுள்ள மனிதர். இப்படித்தான் கதை அமைகிறது. இதில் மிகத் தைரியமாக நடித்திருக்கிறார் சசிகுமார். காதல், டூயட், ஜோடி என எதுவும் இல்லாமல் அந்தக் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்தது சற்றும் வீண்போகவில்லை.
இதையும் படிங்க: ரெட் லைட் வெளிச்சத்துல சும்மா அள்ளுது!. பாதி மறைச்சி மீதியை காட்டும் தமன்னா!…
கதையின் நாயகனாகவே கடைசியில் சசிகுமார் தெரிய ஆரம்பித்தார். படத்தை கொண்டாடதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த வெற்றிக்கு பின்னாடி இந்தப் படத்தின் இயக்குனர் பட்ட வலிதான் அதிகம்.
மந்திரமூர்த்திதான் படத்தின் இயக்குனர். அவருக்கு இது முதல் படம். படப்பிடிப்பு ஆரம்பித்ததிலேயே ஏதோ வயிற்றில் கோளாறு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டாராம். இதை சசிகுமாருக்கு தெரியப்படுத்த உடனே மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: கமலை நாயகனாக மாத்துவது இனி உங்கள் பொறுப்பு… பாலசந்தரிடம் சேர்த்து விட்ட பிரபல நடிகர்..!
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து வயிற்றில் பெரிய கட்டு போட்டுவிட்டார்களாம். இதை அறிந்த சசிகுமார் ‘ பூஜை போட்டாச்சு. படத்தை நிறுத்த வேண்டாம். நான் வேண்டுமென்றால் ஒரு நாள் படத்தை இயக்குகிறேன். அவர் வந்த பிறகு மூர்த்தி பார்த்துக் கொள்ளட்டும்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் மந்திரமூர்த்திக்கு இது முதல் படம். அதனால் கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்து அந்தக் கட்டுடனேயே செட்டில் போய் உட்கார்ந்தாராம். நாற்காலியில் அமர்ந்து கொண்டே கட், ஆக்ஷன் எல்லாம் சொல்லி படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். அன்றைக்கு உள்ள படப்பிடிப்பு முடிந்ததும் மாலை நேரத்தில் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகிவிடுவாராம். இப்படியேதான் இந்தப் படத்தை மந்திரமூர்த்தி எடுத்திருக்கிறார்.