Connect with us
goundamani

Cinema History

பசியில் துடித்த நண்பன்!. கவுண்டமணி செய்த காரியம்!. நக்கல் நாயகனுக்குள் இப்படி ஒரு நல்ல மனசா!..

Goundamani: 1980களில் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவுண்டமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்தவர் இவர். இவர் கோவையை சேர்ந்தவர். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டுதான் வாய்ப்பு தேடி நுழைந்தவர். பாக்கியராஜின் உதவியால் பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைக்க அப்படியே டேக் ஆப் ஆனவர்.

ஒருகட்டத்தில் செந்திலையும் தன்னுடன் சேர்த்துகொண்டு காமெடி செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இவர்கள் இருவரின் காமெடியும் ரசிகர்களால் கொண்டாடப்படவே தொடர்ந்து 30 வருடங்களுக்கும் மேல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!

கரகாட்டக்காரன் படத்தின் ஹைலைட்டே கவுண்டமணி – செந்தில் காமெடிதான். ரஜினி, பிரபு, சத்தியராஜ், கார்த்திக், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களின் வெற்றிக்கே கவுண்டமணி தேவைப்பட்டார். ஒரேநாளில் பல படங்களில் நடித்தவர் இவர். தினமும் இத்தனை லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர் இவர்தான். இப்போது வடிவேலு, யோகிபாபு கூட இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்.

கவுண்டமணி என்றாலே நக்கல்தான். எல்லாவற்றையும் நையாண்டி செய்வார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சகட்டு மேனிக்கு கலாய்த்துவிடுவார். இப்போதும் பலரின் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக கவுண்டமணியின் காமெடி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிப்பதில்லை.

இதையும் படிங்க: தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..

தமிழ் சினிமாவில் பீலி சிவம் என்கிற குணச்சித்திர நடிகர் இருந்தார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். 2017ம் வருடம் இவர் இறந்துபோனார். இவர் ஒருமுறை பேட்டியில் சொன்னபோது ‘நானும் கவுண்டமணியும் சிறுவயது முதலே நாடகத்தில் நடித்து வந்தோம். என்னுடைய நெருங்கிய நண்பன் அவன். ஒருமுறை தெருவில் நடந்து சென்றபோது நாங்கள் இருவருமே சாப்பிடவில்லை. ‘பசி தாங்கமுடியவில்லை’ என்று அவனிடம் சொன்னேன்.

peeli sivam

‘இங்கேயே இரு’ என்று சொல்லிவிட்டு போனவன் சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பார்சலோடு வந்தான். ‘உன்னிடம் பணம் இல்லையே எப்படி வாங்கினாய்?’ எனக்கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் வற்புறுத்தி கேட்டேன் ‘ ரத்த வங்கியில் என் ரத்தத்தை கொடுத்து அதில் கிடைத்த பணத்தில் இதை வாங்கி வந்தேன்’ என சொன்னான். அதை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன்’ என பீலி சிவம் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: பசியில மயக்கமே வந்துடுச்சி!.. இவ்வளவு அசிங்கப்படணுமா?… கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினிகாந்த்..

google news
Continue Reading

More in Cinema History

To Top