தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..

by சிவா |   ( Updated:2023-10-01 14:02:19  )
vijay
X

நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். துவக்கத்தில் தனது அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தார். இவரை வைத்து படமெடுக்க மற்ற இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்வராமல் போனதுதான் அதற்குக் காரணம். ஆனால், இயக்குனர் விக்ரமன் இவர் மீது நம்பிக்கை வைத்து ‘பூவே உனக்காக’ படத்தில் நடிக்க வைத்தார்.

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அஜித்தை போலவே இவரும் துவக்கத்தில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அப்படியே மாஸ் ஹீரோவாகவும் மாறி நிறைய ரசிகர்களை பெற்றார்.

இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..

இப்போது ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோவாக வளர்ந்திருக்கிறார். இவரை வைத்து படம் இயக்க பெரிய இயக்குனர்கள் கூட ஆசைப்படுகிறார்கள். வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் ரசிகர்களும், திரையுலகினரும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இப்போது சினிமா உலகில் பேசும் பொருளாக லியோ படம்தான் இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ விழாவும் ரத்தாகி பரபரப்பை கிளப்பியது. சினிமாவில் அதிரடி காட்சிகளில் நடிக்கும் விஜய் நிஜ வாழ்வில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அதிகம் பேசாதவர். சமீபகாலமாகத்தான் இசை வெளியீட்டு விழாவில் கொஞ்சம் பேச துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அப்பவே இதை செய்த அஜித்!.. இப்போதான் விஜய்க்கு ஞானம் பொறந்திருக்கா?.. இனிமே வெளியவே வரமாட்டாரா?..

நடிகன் என்றாலே பல அழுத்தங்கள் இருக்கும். பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி நடிகரின் ரசிகர்கள் அசிங்கமாக விமர்சிப்பார்கள். திட்டுவார்கள். இல்லாததை கூட பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். எல்லாவற்றையும் கடந்து வரவேண்டும். மனமுடைந்து உட்கார்ந்துவிட்டால் அடுத்த வேலையை செய்ய முடியாது. விஜய் அப்படி மன அழுத்தத்திற்கு ஆளாகும்போதெல்லாம் அவரை நடிகர் கவுண்டமணிதான் காப்பாற்றி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?..

இதை பல வருடங்களுக்கு முன்பு அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். எனக்கு கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிகள் மிகவும் பிடிக்கும். எனக்கு எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கவுண்டமணியின் காமெடி காட்சிகளைத்தான் பார்ப்பேன். வீடியோ மட்டுமில்லாமல் அவரின் காமெடி காட்சிகளை ஆடியோவாகவும் மாற்றி வைத்திருக்கிறேன். அதையெல்லாம் அடிக்கடி கேட்பேன்’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே

Next Story