நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே

0
1463
siva
siva

Actor Sivakarthikeyan: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராகவே வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய்க்கு அடுத்தப் படியாக குழந்தைகளின் விருப்பமான நடிகர் யாரென்றால் அது சிவகார்த்திகேயன்தான்.

தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மாவீரன் படத்தை தொடர்ந்து நடிக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படம் எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..

இந்த நிலையில் முருகதாஸுடன் இணைந்து தன்னுடைய 23வது படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சிவகார்த்திகேயன். இது சம்பந்தமாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

முருகதாஸின் பிறந்த நாள் அன்று அவரை நேரில் போய் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தப் படத்திற்கான ஒப்பந்தத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க: தன் தாயின் முன் சிவாஜிக்கு கிடைத்த உயரிய விருது! பரிசுகளோ பணமோ இல்ல – அங்கதான் நிக்காரு நடிகர்திலகம்

இந்த நிலையில் திடீரென முருகதாஸுடன் இணைந்தது பற்றி சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. துப்பாக்கி படத்தில் முருகதாஸுடன் இணைந்து ராஜ்குமார் பெரியசாமியும் பணியாற்றியிருக்கிறார்.அந்த சமயத்தில் முருகதாஸின் வேலைகளை பற்றியும் அவர் எந்த மாதிரியான கண்ணோட்டத்தில் சினிமாவை பார்க்கிறார் என்பதை பற்றியும் சிவகார்த்திகேயனிடம் சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தன்னை நவீன பாக்யராஜாவாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றும் ஒரு பக்காவான ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு சரியான ஒரு இயக்குனர் அமைய வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: மீனா கைக்கு சென்ற வீட்டுப்பத்திரம்… பார்வதியிடம் மீனாவை திட்டித்தீர்த்த விஜயா!

முருகதாஸ் அடிப்படையிலேயே அரசியல் கருத்துக்களோடு ஆக்‌ஷனையும் கலந்து கொடுப்பவர். கஜினி. ரமணா. துப்பாக்கி போன்ற படங்களில் அவரின் திறமையை பார்க்க முடியும். அதனாலேயே அவரை வைத்து ஒரு பக்கா ஆக்‌ஷன் படத்தில் நடித்து விட வேண்டும் என்பதற்காகவே முருகதாஸுடன் இணைந்திருக்கிறாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் முருகதாஸின் சமீபகால படங்களான  தர்பார் மற்றும் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனாலேயே அவர் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இப்படி இருக்கும் போது எந்த  நம்பிக்கையில் சிவகார்த்திகேயன் இப்படி இறங்கியிருக்கிறார் என்று புலம்பி வருகின்றனர்.

google news