Cinema News
விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..
ரஜினி வேகத்துக்கு இந்த வயதில் விஜய்யால் ஓட முடியுமா என தெரியவில்லை. ஆனால், இந்த வயதிலும் விஜய்யின் வேகத்துக்கு ரஜினிகாந்த் ஈடு கொடுத்து அடுத்தடுத்த அப்டேட்களை இறக்கி வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலம் எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் வசூலில் விஜய் – அஜித் தான் என பேசி வந்த நிலையில், மீண்டும் ரஜினி மற்றும் கமல் அடுத்தடுத்து பெரிய படைப்புகளையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நயன்தாரா பார்த்தா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க!.. என்ன கொடூரம் புஷ்பா இது? கடுப்பான ஃபேன்ஸ்!
விஜய் அப்டேட் வந்தால் கூடவே அஜித் அப்டேட் வரும் என்று பார்த்தால், அதற்கு பதிலாக தற்போது லியோ படத்தின் அப்டேட்களுக்கு ஆப்படிக்கும் விதமாக தலைவர் 170 படத்தின் அப்டேட்டை இறக்கப் போவதாக இப்பவே லைகா நிறுவனம் அதிரடி காட்டி உள்ளது.
அக்டோபர் மாதம் லியோ மாதமாக இருக்கப் போகிறது என விஜய் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், செப்டம்பர் 30ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழாவே நடைபெறாமல் முடங்கிப் போனது. மேலும், பேட் ஆஸ் பாடல் பெரிய ஈர்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுப்பவில்லை என்கின்றனர்.
இதையும் படிங்க: வனிதா பொண்ணு முதல் 2வது மனைவியை விட்டு வந்த பப்லு வரை.. யாரெல்லாம் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் தெரியுமா?
இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதி ஷார்ப்பா ரஜினிகாந்தின் தலைவர் 170 பட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில், அக்டோபர் 1ம் தேதியான நாளை முதல் தொடர்ந்து தலைவர் 170 படத்தில் யாரெல்லாம் நடிக்கப் போறாங்க என்கிற அப்டேட்டை கொடுக்கப் போவதாக லைகா அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா என தாறுமாறு பண்ண நிலையில், தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில் என ஏற்கனவே ஒரு லிஸ்ட் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தானா? இல்லை அதை விட ஸ்பெஷல் இருக்கப்போகுதா என்பதை நாளை முதல் காணலாம்.