Cinema History
சிவாஜி மட்டும் அத செஞ்சிருந்தா வேறலெவல் போயிருப்பார்!.. நிறைவேறாம போன அண்ணாவின் ஆசை…
Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து சினிமாவிற்குள் வந்தவர்கள் ஏராளம். நடிக்கவா செய்தார்? ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்ந்து அல்லவா காட்டினார். அதனால் அவரை எப்படி எளிதாக மறக்க முடியும்? வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரை மட்டும் சொல்லிப் பாருங்கள்.
உடனே நம் மனதில் வந்து நிற்பவர் சிவாஜியாகத்தான் இருக்க முடியும். வ.உசி என சொல்லிப்பாருங்கள். விடுதலை போராட்ட வீரர் சிதம்பரபிள்ளை முகமா தெரியும்? நம் நடிகர் திலகம் முகம் அல்லவா நிற்கும்.
இதையும் படிங்க: கம் பேக்னா இப்படி இருக்கணும்!.. ஃபிளாப்புக்கு பின் சூப்பர் ஹிட் கொடுத்த 3 இயக்குனர்கள்…
இப்படி புராணக் கதைகள், வரலாற்றில் போற்றத்தக்க தலைவர்களாக இருந்த கதாபாத்திரங்கள், விடுதலை போராட்ட வீரர்களின் கதாபாத்திரங்கள் என தன் ஒரே உருவத்தில் அத்தனை பேரையும் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்திருந்தால் இப்பேர்பட்ட ஒரு நடிகரை நம்மால் பார்த்திருக்க முடியுமா? வீர வசனங்களை எளிதாக பேசிவிட்டு அத்தனை பேரின் கைதட்டல்களையும் முதல் படத்திலேயே அள்ளிக் கொண்ட சிறந்த நடிகர்.
சிவாஜி ஆரம்ப காலங்களில் அறிஞர் அண்ணாவின் வீட்டில் தான் இருப்பாராம். அப்போது சிவாஜியின் கணீர் குரல் அண்ணாவை மிகவும் ஈர்த்திருக்கிறது. இப்பேற்பட்ட ஒரு பேச்சாளர்தான் வேண்டும் என நினைத்த அண்ணா, திராவிட கழகத்தில் சிவாஜியை ஒரு பேச்சாளராக்க வேண்டும் என விரும்பினாராம். அதனால் தான் போகும் பிரச்சாரக் கூட்டத்திற்கு எல்லாம் சிவாஜியையும் அழைத்துக் கொண்டு போவாராம் அண்ணா.
இதையும் படிங்க: இதுக்கெல்லாம் நான் ஆளு இல்ல! – தேடி வந்த இயக்குனரை திருப்பி அனுப்பிய சேரன்
அப்போது ஒரு பிரச்சாரத்தில் சிவாஜியை பேசச் சொல்லியிருக்கிறார். நம் நடிகர் திலகம் நாடக மேடையில் பேசி பழக்கப்பட்டவர் ஆயிற்றே. அதனால் அந்த பிரச்சார மேடையில் மைக் இருக்கும் இடத்தை தவிர வலது இடதுபுறமாக நடந்து கொண்டே பேசினாராம். மைக் நடுப்பகுதியிலேயே நிற்குமாம்.
இதை பார்த்த அண்ணா ‘ நீ அரசியலுக்கும் சரிவர மாட்ட, பிரச்சாரத்திற்கும் சரி வர மாட்ட. ஒழுங்கா சினிமா பக்கமே ஓடிடு’ என சொல்லி விரட்டி விட்டாராம்.