Connect with us
nelson

Cinema News

கம் பேக்னா இப்படி இருக்கணும்!.. ஃபிளாப்புக்கு பின் சூப்பர் ஹிட் கொடுத்த 3 இயக்குனர்கள்…

திரைத்துறையை பொறுத்தவரை அது கதாநாயகனோ, நாயகியோ, இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ வெற்றி மட்டுமே அவர்களின் அடையாளமாக பார்க்கப்படும். 40 வருடங்களுக்கும் மேல் ரஜினியை ஏன் கொண்டாடுகிறார்கள் எனில் சில தோல்விப்படங்களை கொடுத்தாலும் உடனே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிடுவார். 70 வயதிலும் ஜெயிலர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் என்பதால்தான்.

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டால் பல வருடங்களுக்கு அவர் தாக்குபிடிப்பார். இடையில் அவர் தோல்விப்படங்களை கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் அவரை தேடி வருவார்கள். தனுஷ், விக்ரம், கார்த்தி ஆகியோர் சினிமாவில் அறிமுகாகி தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள். அதனால்தான் இப்போது வரை அவர்கள் தாக்குப்பிடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

முதல் படம் ஓடவில்லை எனில் அந்த நடிகர், நடிகை என யாருக்குமே அடுத்த வாய்ப்பு கிடைக்காது. இதில், இயக்குனர்கள் நிலைமை பாவமோ பாவம். போராடி ஒரு தயாரிப்பாளரையும், ஹீரோவையும் பிடித்து ஒரு படம் இயக்கி அது ஓடவில்லை எனில் அவருக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. அப்படி ஆயிரக்கணக்கான இயக்குனர்கள் திரையுலகில் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தோல்வி படங்களை கொடுத்தாலும் சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த 3 இயக்குனர்கள் பற்றி தெரிந்துகொள்வோம். ஆனால், முதல் படம் தோல்விப்படம் கொடுத்தவர்கள் இல்லை. முதல் படம் வெற்றி பெற்று அடுத்தடுத்து தோல்விப்படத்தை கொடுத்து பின் கம்பேக் கொடுத்தவர்கள்.

இதையும் படிங்க: இனிமே லோகியை நம்பி யாரும் பேட்டி கொடுத்திடாதீங்கப்பா!.. அப்புறம் செஞ்சிப்புட போறாரு..!

தனுஷை வைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கியர் மித்ரன் ஜவஹர். அதன்பின் குட்டி, உத்தமபுத்திரன், மதில் என சில படங்களை இயக்கினார். பெரிதாக ஓடவில்லை. ஆனால், தனுஷ், நித்யா மேனனை வைத்து திருச்சிற்றம்பலம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

அதேபோல். விஷாலை வைத்து இரும்புத்திரை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மித்ரன். அடுத்த ஷங்கர் போல வருவார் என எதிர்பார்த்த போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்து இயக்கிய ஹீரோ திரைப்படம் பிளாப் ஆனாது. ஒரு படம்தான்.. இவர் அவ்வளவுதான்.. என திரையுலகில் எல்லோரும் பேசினார்கள். ஆனால், கார்த்தியை வைத்து சர்தார் எனும் ஸ்பை திரில்லர் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார்.

அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் என வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் நெல்சன். விஜயை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. சமூகவலைத்தங்களில் பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அது மனரீதியாகவும் அவரை பாதித்தது. ஆனாலும், ரஜினியை வைத்து ஜெயிலர் படம் கொடுத்து அப்படம் ரூ.700 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

இதையும் படிங்க: லியோல செஞ்ச தப்ப இனி செய்யக் கூடாது! உஷாரா முரட்டு வில்லன தட்டித் தூக்கிய லோகேஷ் – மிரள வைக்கும் ரஜினி171

google news
Continue Reading

More in Cinema News

To Top