
Cinema News
அஜித் சொல்லித்தான் அந்த படத்தில் நடித்தேன்!.. பல வருடங்கள் கழித்து ரகசியம் சொன்ன ஜெய்!…
Published on
By
Actor Ajithkumar: இசையமைப்பாளர் தேவாவின் உறவினர்தான் நடிகர் ஜெய். விஜய் நடித்த பகவதி திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் எங்கேயும் எப்போதும் திரைப்படம் அவரை அதிகம் பிரபலப்படுத்தியது.
அட்லி முதலில் இயக்கிய ராஜா ராணி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சசிக்குமார் முதன்முதலில் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். நிறைய தோல்விப்படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: படம் எப்படி வேணா இருக்கட்டும்! இத மட்டும் வாங்கிக் கொடுங்க!. – தயாரிப்பாளரிடம் லோகேஷ் கேட்ட பரிசு
விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கிவரும் புதிய படத்திலும் ஜெய் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷுடன் இவர் நடித்த தீரா காதல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்போது 6 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
டிரிபிள்ஸ், லேபிள் ஆகிய வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார். வீரபாண்டியபுரம் என்கிற திரைப்படத்திற்கு ஜெய் இசையும் அமைத்திருக்கிறார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சசிக்குமாருடன் இணைந்து நடித்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் இவரின் திரைவாழ்வில் ஒரு முக்கிய படமாகும்.
இதையும் படிங்க: அப்படியே உனக்கு வேணும்னா வேற இடம் இருக்கு! சிவகார்த்திகேயனை கிழித்தெடுக்கும் பிரபலம்
இந்த படத்திற்காக தலைமுடி, தாடியெல்லாம் வளர்த்து மதுரை பாஷை பேசி நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பேசிய ‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா’ என்கிற வசனம் இப்போதுவரை மீம்ஸ்களில் பார்க்க முடிகிறது. இந்த பட வாய்ப்பு முதலில் பாக்கியராஜின் மகன் சாந்தனவுக்கு போனது. ஆனால், அவர் நடிக்காமல் போக ஜெய் நடித்தார்.
இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஜெய் ‘அப்போது 5 கதைகள் என்னை தேடி வந்தது. இதுபற்றி நான் அஜித் சாரிடம் பேசினேன். அவர்தான் சுப்பிரமணியபுரம் கதையை தேர்ந்தெடுத்து ‘இந்த கதையில் நடி’ என சொன்னார். அவர் சொன்னதால்தான் அந்த கதையில் நடித்தேன்’ என ஜெய் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: இதனால்தான் லியோ படத்தில் நடிக்கவில்லை!.. ரிலீஸுக்கு பின் உண்மையை சொன்ன விஷால்…
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...
Bison: சியான் விக்ரமின் மகன் துருவ். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம்...
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...