Connect with us
leo

Cinema News

அவன எப்படி வச்சிருந்தேன்? இப்படி ஆக்கிட்டீங்களேடா! விஜயை பற்றி சந்திரசேகர் உருக்கமான பேட்டி

SA Chandrasekar: விஜய் கோலிவுட்டின் நம்பிக்கை  நட்சத்திரமாக திகழ்கிறார் என்றால் அதற்கு விதை போட்டதே அவருடைய அப்பாவான சந்திரசேகர்தான். நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.

இருந்தாலும் வந்த தடைக்கல்லை எல்லாம் படிக்கல்லாகக் கொண்டு முன்னேறிக் கொண்டே சென்றார். தன் மகனை ஸ்கிரீனில் எப்படி காட்ட வேண்டும்? எப்படியெல்லாம் காட்டக் கூடாது என்பதை முழுவதுமாக அறிந்தவர் சந்திரசேகர். விஜய் இந்தளவு ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார் என்றால் அவரை செதுக்கிய விதம் அப்படி.

இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..

அதன் முழு கிரெடிட்ஸும் சந்திரசேகரையே சேரும். தமிழ் சினிமாவில் பெஸ்ட் கிரீன் ப்ளே ரைட்டராகவும் சந்திரசேகர் அறியப்படுகிறார். இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சில் விமர்சகராக இருக்கும் அந்தனன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்தார்.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகரை பற்றியும் விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் பற்றியும் ஒரு தகவலை கூறினார். அதாவது எஸ்.ஏ.சந்திரசேகரின் பழைய பேட்டி ஒன்றை அந்தனன் சமீபத்தில் பார்த்தாராம். அது பீஸ்ட் பட ரிலீஸ் சமயத்தில் எஸ்.ஏ.சி அளித்த பேட்டியாம்.

இதையும் படிங்க: 230 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்!.. பிரபாஸ் பிறந்தநாளை தெறிக்கவிட்ட டோலிவுட் ரசிகர்கள்!..

அதில் அவர் ‘ஒரு படத்தில் ஸ்கீரீன் ப்ளே என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு அறிந்தவன் நான். அதுவும் விஜய் என் ஹீரோ. நான் உருவாக்கிய ஹீரோ விஜய். அவரை எங்கு கொண்டுவந்து வச்சிருக்கேன்.இப்படி ஸ்கிரீன் ப்ளே பண்ணத் தெரியாமல் போய் கவுத்திட்டீங்களே.’ என மிகவும் வருந்தி புலம்பியிருந்தாராம்.

இதே எஸ்.ஏ.சி இப்பொழுது ஒரு பேட்டி கொடுத்தார் என்றால் லியோ படத்தை பற்றி என்ன சொல்லியிருப்பார்? இதே கருத்தைத்தான் முன்வைத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் திடீரென ஒரு தெலுங்கு படத்தின் முக்கியமான காட்சி வீடியோ வைரலானது.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. 4 நாட்களிலேயே இண்டஸ்ட்ரி ஹிட்டா?.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுக்கெல்லாம் ரெஸ்ட் இன் பீஸ் தான்!..

ஜெகதிபாபு நடித்த அந்தப் படத்தில் வந்த காட்சி அப்படியே லியோவில் இருக்கிறது. காஃபி ஷாப்பில் சாண்டி மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் விஜய் சண்டை போடும் காட்சி அப்படியே அந்தப் படத்திலும் இருக்கிறது. 13 வருடங்களுக்கு  முன்பு ஜெகபதி பாபு நடித்த காயம் 2 படத்திலும் இதே சண்டைக் காட்சி உள்ளது.

ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்டதுதான் இந்த தெலுங்குப் படமும். எப்படி இதை போய் லோகேஷ் எடுத்தார் என தெரியவில்லை. 20 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அங்குமிங்குமாக சில காட்சிகளை உருவி லியோ படத்தை எடுக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?

அதுவும் விஜய் இந்தப் படத்தின் கதையை கேட்டாரா? ஒரு 2 மணி  நேரம் கதைக்காக உட்காரமாட்டாரா விஜய்? என அந்த சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் கூறினார்.

 

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top