தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..

Actor Nagesh: 60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்த்தில் மத்திய அரசு பணியை விட்டுவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடியவர். ஒல்லியான தேகம், சரியான டைமிங், உடலை வளைத்து வளைத்து ஆடும் நடனம், வித்தியாசமான உடல்மொழி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தவர்.

மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்பட்டவர். பாலச்சந்தரின் இயக்கத்தில் பல படங்களில் நடித்தார். சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். மனோரம்மாவுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். பின்னாளில் குணச்சித்திர நடிகராக கலக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: திருவிளையாடல் தருமி வேடத்தை நாகேஷ் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?.. ஒரு ஆச்சர்ய தகவல்..

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர் ஆகியோரின் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர்களின் வெற்றிக்கே நாகேஷ் தேவைப்பட்ட காலம் அது. ஒரேநாளில் பல திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். இவருக்காக படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் காத்திருந்த காலமும் உண்டு.

கமல் மிகவும் மதிக்கின்ற நடிகர் நாகேஷ். அதனால்தான் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், நம்மவர், தசாவதாரம் என அவர் நடித்த பல படங்களில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சென்னை தி.நகரில் நாகேஷ் திரையரங்கும் என ஒரு தியேட்டர் கட்டினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..

ஆனால், பள்ளிக்கு அருகில் விதியை மீறி பள்ளிக்கு அருகில் தியேட்டர் கட்டப்பட்டிருப்பதாக கூறி அதை திறக்க மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். எனவே, அவரிடம் சென்று உதவி கேட்பது என நாகேஷ் முடிவு செய்தார். எம்.ஜி.ஆரை சந்தித்து இதுபற்றி பேசினார்.

திருமணம் நடத்துவதற்கு அனுமதி அளித்துவிட்டு முதலிரவுக்கு தடை போடுவது போல தியேட்டர் கட்டுவதற்கு அனுமதி அளித்துவிட்டு திறக்க கூடாது என சொல்கிறார்கள் என நாகேஷ் சொல்ல எம்.ஜி.ஆர் குலுங்க குலுங்க சிரித்தாராம். அதன்பின் எம்.ஜி.ஆரின் உதவியால் அந்த தியேட்டர் திறக்கப்பட்டது. பல வருடங்கள் செயல்பட்ட அந்த தியேட்டர் சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு காம்ப்ளக்ஸாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகன் பிறந்தும் பார்க்க போகாத நாகேஷ்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா?!…

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it