அடுத்தவன பத்தி தெரியலனா உங்க வேலையா பாருங்க – சிவகார்த்திகேயனுக்கு வரிஞ்சிகட்டும் சீரியல் நடிகர்…

Published on: October 23, 2023
sivakarthikeyan issue
---Advertisement---

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் எங்க வீட்டு பிள்ளை, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார்.

இத்தனை நாட்களாக ரசிகர்களின் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் எங்க வீட்டு பிள்ளையாக இருந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவால் மக்கள் அனைவரும் வெறுக்கும்படியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் மீது பல ரசிகர்கள் வெறுப்பினை கொட்டிவருகின்றனர்.

இதையும் வாசிங்க:ஷூட்டிங்கில் விஜயை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்!..

சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தன்னால் மன்னிக்கவே முடியாத ஒரு துரோகத்தை தனக்கு செய்ததாகவும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு தான் அதனை கூற விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இதனை ஏற்று கொள்ள முடியும் என மறுதரப்பு ரசிகர்களும் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் இவ்வாறு நடந்ததற்கு இரவோடு இரவாக இமானுக்கு போன் செய்து அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சம்பவம் பற்றி சிவகார்த்திகேயன் தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதையும் வாசிங்க:இது ஹிட் அடிக்காது!. விஜய் ரிஜெக்ட் பண்ணிய கதை!. ஆர்வமா நடித்து பல்பு வாங்கிய சூர்யா…

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பிரபல சீரியல் நடிகரான தீபக் பேசியுள்ளார். தமிழும் சரஸ்வதியும், தென்றல் போன்ற சீரியலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தீபக். இவரும் சிவகார்த்திகேயனும் விஜய்டிவியின் ஜோடி நம்பர்1 போன்ற நிகழ்ச்சியின் மூலம் நெருக்கமானவர்கள். ஆரம்பகாலத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இவரும் ஒரு காரணமாக இருந்துள்ளார்.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் அப்படிபட்டவர் இல்லை. மேலும் இன்னொருவர் வாழ்வில் நடந்த எந்தவொரு விஷயத்திற்கு சாட்சிகள் இல்லாமல் நாம் நம்ப கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அப்படி சாட்சிகள் இல்லையென்றால் மற்றவர்களை பற்றி பேசவே செய்யாதீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க:நானும் என்ன பண்ணுவேன்? ‘காதல் மன்னன்’னாக எப்படி மாறினேன் என்பதை ஜெமினியே கூறிய சுவாரஸ்யமான தகவல்