Connect with us
vijay

Cinema News

ஷூட்டிங்கில் விஜயை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். அவரின் ரசிகர்கள் அவரை தளபதி என அழைக்கிறார்கள். அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். துவக்கத்தில் காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த விஜய் ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க துவங்கினார்.

இதனால் இவருக்கு ரசிகர்களும் அதிகமானார்கள். குறிப்பாக விஜய்க்கு அதிக அளவில் பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். வாரிசு படத்திற்குபின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ திரைப்படம் கடந்த 4ம் தேதி வெளியானது.

இதையும் படிங்க: ‘லியோ’வில் விஜய் தூக்கிவைத்திருந்த குழந்தை இந்த நடிகையின் மகனா? தோழியை மறக்காத தளபதி

படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனெனில், லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஒருபக்கம், இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும், வேறுபடம் இல்லை என்பதாலும், வார இறுதி மற்றும் ஆயுதபூஜை விடுமுறை என்பதாலும் தியேட்டரில் கூட்டம் கூடி வருகிறது இந்நிலையில், தமிழில் பல படங்களில் நடித்தவரும் வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தவருமான கணேஷ் வெங்கட்ராம் விஜயை பற்றிய ஒரு முக்கிய தகவலை ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: விஜய் போன் பண்ணி திட்டினாரு!.. வருத்தப்பட்டு பேசிய லலித் – எப்படி போக வேண்டிய படம்?

இப்போது மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாருமே கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேக் கிடைக்கும்போதெல்லாம் எல்லோரும் மொபைலில் நேரம் செலவழிப்பார்கள். ஆனால், விஜய் அப்படி இல்லை. செல்போனை பார்க்க மாட்டார்.

ganesh

மதிய உணவு இடைவேளை மற்றும் வீட்டில் சென்ற பிறகுதான் மொபைலை பார்க்கிறார். எதாவது முக்கியமான கால் வந்தால் மட்டும் பேசுவார் அவ்வளவுதான். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் விஜயிடமிருந்து இந்த நல்ல பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறேன்’ என அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: வேற ஒன்னும் இல்ல! மிருக தோஷம்தான்! பறவை, விலங்கு பேர்ல டைட்டில் வச்சு பல்பு வாங்கிய விஜய் படங்கள்

google news
Continue Reading

More in Cinema News

To Top