Connect with us
vijay

Cinema News

வேற ஒன்னும் இல்ல! மிருக தோஷம்தான்! பறவை, விலங்கு பேர்ல டைட்டில் வச்சு பல்பு வாங்கிய விஜய் படங்கள்

Vijay Movies: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் இப்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் நடிப்பில் லியோ படம் வெளியானது. லோகேஷ் இயக்கத்தில் வெளியான அந்த படம் ரசிகரகளிடையே ஒரு கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய்க்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் பேரில் வெளியாகும் திரைப்படங்கள் சரியாக ஓடுவதில்லை என்றும் அவருக்கு மிருகதோஷம் இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்சி கலைந்தபோது எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த அந்த விஷயம்!. மிஸ்டர் கூல் இவர்தான் போல!..

அந்த வகையில் அவர்கள் கூறியதை போல் மிருகங்களின் பேரில் வந்த படங்கள் எதுவுமே விஜய்க்கு கைக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நேற்று வெளியான லியோ திரைப்படமும் இதற்கு உதாரணம்.

அதே போல் விஜய் , த்ரிஷா நடிப்பில் வெளியான குருவி திரைப்படம். இந்தப் படத்தில் எப்படி விஜய் நடித்தார் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அந்தளவுக்கு படத்தில் சொல்லும் படியாக எதுவுமே இல்லை.

இதையும் படிங்க: மறுபடியும் முதலேந்தா.. ஈஸ்வரியால் கடுப்பான பாக்கியா..! சண்டைக்கு இனி பஞ்சமே இல்ல போல!

விஜய், தமன்னா நடிப்பில் வெளிவந்த சுறா திரைப்படம். தான் நடித்த படத்திலேயே ஏண்டா இந்தப் படத்தில் நடித்தோம் என்பதை போல் ஃபீல் பண்ண வைத்த படம் சுறா என்று தமன்னாவே ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அந்தளவுக்கு மொக்க வாங்கிய படம்தான் சுறா.

சிம்புதேவனின் இயக்கத்தில் விஜய் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த படம்தான் புலி. இது சிம்புதேவனின் படமாகவும் இல்லாமல் விஜயின் படமாகவும் இல்லாமல் இருந்ததுதான் வேதனை. ஃபேண்டஸி கதையாக இருந்தாலும் கதைக்களத்தில் ஒரு விறுவிறுப்பு இல்லாமல் இந்தப் படமும் அடி வாங்கியது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஸ்ருதி-ரவி கல்யாணத்தில் பகடைக்காயான மீனா வாழ்க்கை… ஆத்திரத்தில் முத்து..!

விஜய்க்கு கடும் விமர்சனத்திற்கு ஆரம்பப்புள்ளி போட்ட படமாக பீஸ்டை சொல்லலாம். வசூலில் அபார சாதனை படைத்தாலும் ரசிகர்களின் அதிகளவு மீம்ஸ்களுக்கு தீனி போட்ட படமாக பீஸ்ட் அமைந்தது.

விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் பரதன் இயக்கத்தில் வெளிவந்த படம் பைரவா. கல்வியை மையமாக வைத்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பலை எப்படி அடக்குகிறார் ஹீரோ என்பதுதான் கதை. கதையில் ஆங்காங்கே விறுவிறு இருந்தாலும் ரசிகர்களை ஏதோ ஒட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படமும் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. இப்போது இந்த லிஸ்ட்டில் லியோ படமும் வந்து ஒட்டிக் கொண்டது.

google news
Continue Reading

More in Cinema News

To Top