விஜய் போன் பண்ணி திட்டினாரு!.. வருத்தப்பட்டு பேசிய லலித் - எப்படி போக வேண்டிய படம்?

Vijay - Lalith : தமிழ் சினிமாவில் விஜய் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் படங்களை உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இன்று தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.

இவருக்கு இருக்கும் மார்கெட் இந்திய சினிமாவிலேயே அளப்பறியாதது. அந்தளவுக்கு விஜயின் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறுகிறதோ இல்லையோ வசூல் ரீதியில் விஜய்க்கு போட்டியாக விஜயே நிற்கிறார்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ படத்துல வேறெந்த வெங்காயமும் இல்ல! ஆனா எப்படி ஓடிச்சு தெரியுமா? மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி

சமீபத்தில் ரிலீஸான லியோ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் ரிலீஸுக்கு முன்பாகவே டேபிள் பிராஃபிட்டை படக்குழு பார்த்து விட்டார்கள். அதற்கேற்ற வகையில் விஜயின் சம்பளமும் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்து வருகிறது.

லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில் விஜயின் சம்பளம் 200 கோடி என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் அக்கறை காட்டக் கூடியவர் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது லலித் குமார் சொன்ன ஒரு தகவல்.

இதையும் படிங்க:எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

விக்ரம் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் மகான். இந்தப் படம் ஒரு ஆக்‌ஷன் படமாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்டதற்கு விஜய் லலித்திற்கு போன் செய்து திட்டினாராம்.

தியேட்டரில் ஓட வேண்டிய படத்தை ஏன் ஓடிடியில் ரிலீஸ் செய்தாய் என கேட்டாராம். அதன் பிறகு தான் தப்பு பண்ணிட்டோமே என லலித் வருந்தினாராம். அந்த சமயத்தில் லலித்திடம் மகான் மற்றும் கோப்ரா ஆகிய இருபடங்கள் ஒன்றாக இருந்ததாம்.

இதையும் படிங்க: உன் அழகை பாத்தே பாழாப்போனோம்!.. டைட் பனியனில் நச்சுன்னு காட்டும் திவ்யா பாரதி!…

ஒரே நேரத்தில் இரு படங்களையும் வைத்து சமாளிக்க முடியாது என கருதியே மகான் படத்தை ஓடிடியில் வெளியிட்டாராம். விக்ரம் கூட ஏன் இப்படி பண்றீங்க என்றும் கேட்டாராம். அந்த நேரம் கோவிட் எல்லாம் முடிந்து மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்ற பயமும் இருந்ததாம். அதனாலேயே ஓடிடியில் வெளியிட்டதாக லலித் கூறினார்.

 

Related Articles

Next Story