ஜெயிலர் படத்துல ஒரு வெங்காயமும் இல்ல!.. இறங்கி அடிக்கும் மன்சூர் அலிகான்..

Jailer - Mansoor alikhan: ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியாகி தாறு மாறாக ஒடி சாதனை படைத்த படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஓடி வெற்றிப் பெற்றது.

ரஜினியின் கெரியரில் ஒரு முக்கிய படமாகவும் ஜெயிலர் படம் அமைந்தது. அனிருத் இசையில் படம் வேற லெவலுக்கு சென்றது. பக்கா ஆக்‌ஷன் படமாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் வேற எந்த வெங்காயமும் இல்ல. ஆனால் படம் எப்படி ஓடுச்சு என மன்சூர் அலிகான் ஜெயிலர் படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது நேற்று மன்சூர் அலிகான் தயாரிப்பில் தயாராகி கொண்டிருக்கும் சரக்கு படம் சென்சாருக்கு சென்று திரும்பி வந்திருக்கிறது.

சரக்கு படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரி சென்சார் மன்சூர் அலிகானிடம் சொல்ல என்னால் எதையும் நீக்க முடியாது என சொல்லி விட்டாராம். ஒரு காட்சியில் கவர்ச்சிகரமான சீன் இருக்கிறது என சென்சார் அந்தக் காட்சியை நீக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவுமே அந்த சீனில் இல்லை என கூறி,

இதையும் படிங்க: உன் அழகை பாத்தே பாழாப்போனோம்!.. டைட் பனியனில் நச்சுன்னு காட்டும் திவ்யா பாரதி!…

ஜெயிலர் படத்தில் தமன்னா தொடையை காட்டி அந்த ஆட்டம் ஆடுச்சே. அதை சென்சார் தடுத்துச்சா? அதெல்லாம் அவங்களுக்கு தெரியலயா? ஜெயிலர் படத்தில் அந்த தமன்னா ஆடிய ஆட்டத்த தவிர வேற எந்த வெங்காயமும் இல்ல.

அந்த பாட்டுக்காகவே படம் ஓடியது என தன் ஆதங்கத்தை அந்தப் பேட்டியில் கொட்டி தீர்த்தார் மன்சூர் அலிகான்.

இதையும் படிங்க: படம் பார்க்க அங்க போய்ட்டாங்க!.. வசூல்லாம் போச்சி!.. புலம்பும் லியோ பட தயாரிப்பாளர்….

 

Related Articles

Next Story