ஆஸ்கார் நாயகனையே தட்டி வைத்த விஜய்… உலகளாவில் லியோ வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published on: October 23, 2023
---Advertisement---

Leo Movie: விஜயின் லியோ படத்தினை பத்தின பேச்சு இன்னமும் ஓய்ந்தப்பாடி இல்லை. பலர் இதை மொக்க படம் என விமர்சனம் செய்தாலும் ஹாலிவுட்டையே தற்போது லோகேஷின் இயக்கம் ஆட்டி படைத்து விட்டதற்கு ஒரு சூப்பர் செய்தி ரிலீஸாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. இப்படத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் நடித்திருந்தனர். ரொம்பவே ஆர்ப்பாட்டம் இல்லாத கதைக்கு அழகாக மெருகேற்றி இருந்தார் லோகேஷ். இந்த படத்தின் கதையை விட லோகேஷன் தற்போது ஹிட் கொடுத்து இருக்கிறது.

இதையும் படிங்க: லியோவில் மகனாக நடித்தது இந்த சர்ச்சை நடிகையின் மகன் தானா..! இது என்ன புது கதையா இருக்கு..!

லியோ படத்தின் முன்வியாபாரமே கிட்டத்தட்ட 450 கோடி வரை என பேச்சுகள் எழுந்தது. இது ஒரு புறம் இருக்க ரஜினியின் ஜெயிலர் வசூல் 700 கோடி நெருங்கியது. இதனால் அந்த படத்தினை முந்தி தமிழின் முதல் 1000 கோடி படமாக்க படக்குழு தீவிரமாக வேலை செய்தது. ஆனால் படம் ரிலீஸாகி மோசமான விமர்சனத்தினையே பெற்றது. கிட்டத்தட்ட லோகேஷின் கேரியரில் முதல் தோல்வி படம் எனப் பேச்சுகள் எழுந்தது.

ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் லலித்தே இந்த படம் 1000 கோடியை தொடாது என ஓபனாக சொல்லி விட்டார். இருந்தும் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 120 கோடி ரூபாயிற்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முதல் நாளே ஜெயிலர் வசூலை லியோ பீட் செய்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் இன்னொரு சாதனையை செய்து இருக்கிறது.

இதையும் படிங்க: இதுக்கு வாய்ப்பே இல்லை… மீசை ராஜேந்திரனின் திடீர் உருட்டு..! சரி சொன்னத எப்போ செய்வீங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஆஸ்கார் விருது வாங்கிய லியனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளிவந்த கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படத்தின் வசூலை முந்தி இருக்கிறது. அந்த வகையில் க்ளோபல் பாக்ஸ் ஆபிஸில் லியோ படம் 48.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இதில் காப்ரியோ படம் 44 மில்லியன் டாலர் தான் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிட்டத்தட்ட கவலையில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறதாம். இந்த காம்ஸ்கோரை பொய் என சிலர் ட்விட் செய்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.