இதுக்கு வாய்ப்பே இல்லை… மீசை ராஜேந்திரனின் திடீர் உருட்டு..! சரி சொன்னத எப்போ செய்வீங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

Meesai Rajendran: லியோ படம் குறித்து தான் இன்னமும் சர்ச்சை ஓய்ந்தப்பாடு இல்லை. இந்நிலையில் 4 நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கும் நிலையில் சிலர் அதற்கும் தற்போது போர்க்கொடி தூக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் விஜயின் லியோ படம் ஜெயிலர் வசூலை தாண்டி விட்டால் தன்னுடைய மீசையை எடுத்து கொள்வதாக நடிகர் மீசை ராஜேந்திரன் தடாலடியாக ஒரு அறிவிப்பை விட்டார். ஆனால் லியோ ரிலீஸாகி வசூல் கிட்டத்தட்ட் 400 கோடி நெருங்கி விட்ட நிலையில் அவர் மூச்சு காட்டாமல் இருந்தார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஸ்டேஷனில் ரவியை பிரித்து மேய்ந்த முத்து… தடாலடியாக பதில் சொன்ன ஸ்ருதி!

தற்போது தன்னுடைய மீசையை காப்பாற்ற புது வழியில் இறங்கி இருக்கிறார். அதற்கு அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர். அவரின் ஜெயிலர், 2.ஓ படங்களின் மவுஸை இந்த படம் தாண்டாது என்பதாலே இதை சொன்னேன்.

1000 கோடி வசூல் செய்து விட்டது என்பதை தயாரிப்பாளர் ட்விட்டர் கணக்கில் போடட்டும். அவங்க ஐடியில் அதை கணக்கு காட்டட்டும். நான் மீசையை எடுத்துக்கிறேன். ஒருநாள் ரெக்கார்ட் ப்ரேக் பண்ணிட்டாரு. இன்னும் நாள் இருக்குல. பார்ப்போம். சிங்கிள் ஸ்க்ரீனை பாருங்க. கர்நாடகாவில் முதல் நாள் 13 கோடி, அடுத்த நாள் 3 கோடிக்குள் தான். மூன்றாவது நாள் அதை விட கம்மி.

இது தான் பல மாநிலங்களில் உண்மை சம்பவம். இப்படி பார்த்தால் 400 கோடியெல்லாம் படம் தொடாது. ஆனால் இது ஹிட் படம்தான். நெட் ப்ளெக்ஸுக்கு இந்த படத்தினை 125 கோடிக்கு விற்று விட்டனர். மற்ற ரைட்ஸ் எல்லாம் சேர்த்து 300 கோடி நெருங்கி விடும். நல்ல வசூலாக இருக்கும் படமாக இருந்தால் தியேட்டர்காரர்கள் படத்தின் ஸ்க்ரீனை குறைக்கவே மாட்டார்கள்.

இதையும் படிங்க: லியோவில் மகனாக நடித்தது இந்த சர்ச்சை நடிகையின் மகன் தானா..! இது என்ன புது கதையா இருக்கு..!

 

Related Articles

Next Story