Connect with us

latest news

சிறகடிக்க ஆசை: ஸ்டேஷனில் ரவியை பிரித்து மேய்ந்த முத்து… தடாலடியாக பதில் சொன்ன ஸ்ருதி!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி டீ கொண்டு வந்து ரவிக்கு கொடுக்கிறார். சோகமாக இருக்கும் ரவி, ஸ்ருதியை பார்த்து உனக்கு வீட்டை விட்டு வந்தது கவலையா இல்லையா எனக் கேட்கிறார். அவங்க என்ன புரிஞ்சிக்கல. நான் ஏன் கவலைப்படணும் என்கிறார்.

ஆனால் ரவி எங்க வீட்டுல எப்படி இருக்காங்களோ என பதறுகிறார். எதுவும் ஆகாது. இரண்டு நாள் அமைதியா இரு. எல்லாம் சரியாகிவிடும் என ஸ்ருதி கவலையே படாமல் பேசுகிறார். தொடர்ந்து அண்ணாமலைக்கு இட்லி வாங்கி வந்து ஊட்டுகிறார் முத்து.

இதையும் படிங்க: காக்கானு சொல்லி இத்தன நாளா ஏமாத்திருக்காங்க! பராசக்தி படத்தின் ‘கா..கா..கா’ பாடலில் இருக்கும் ட்விஸ்ட்…

ஆனால் அதை அவர் சாப்பிடாமல் தட்டி விடுகிறார். மனோஜ் விஜயாவுக்கு சாப்பாடு வாங்கி வரவா எனக் கேட்க அவர் மறுத்துவிடுகிறார். வெளியில் வரும் முத்து மீனாவை திட்டி விட்டு போகிறார். பிறகு மீனா முடிவாக ரவிக்கு என் மேல உண்மையிலேயே மரியாதை இருந்தா போன் பண்ணுங்க என்று மெசேஜ் பண்ணி வைக்கிறார்.

அந்த நேரத்தில் ஃபோனை ஆன் செய்த ரவி உடனே மீனாக்கு கால் செய்து விடுகிறார். மீனா, என்ன ரவி இப்படி பண்ணிட்டீங்க வீட்டுக்கு வருவீங்கனு நம்பி தானே வந்தேன். ஸ்ருதி அப்பா, அம்மா புகாரால உங்க அப்பா லாக் அப்பில் இருக்கார் எல்லோருமே ஸ்டேஷன்ல இருக்கோம் என்கிறார்.

இனியும் நீங்க வரலனா நான் செத்தா கடைசியாக பார்க்க வருவீங்கள என மிரட்டிவிடுகிறார். இதில் பதறிய ரவி தான் வருவதாக கூறிவிட்டு ஸ்ருதியை அழைத்து கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் ரவி வரும் விஷயத்தினை மீனா சொல்கிறார். அவர் ஸ்டேஷனுக்கு வந்ததும் முத்து போட்டு அடித்து துவைக்கிறார். பின்னர் விஜயா இதெல்லாம் மீனா சொல்லி கொடுத்தால் தானே என திட்டுகிறார்.

இதையும் படிங்க: அரை டவுசர்ல சும்மா கும்முன்னு இருக்க!.. இளசுகளை மயக்கும் பிக்பாஸ் ரவீனா..

ரவி அண்ணி செய்யலை என சொல்லும் நேரத்தில் ஸ்ருதிக்கு அடி விழுகிறது. அடுத்து ஸ்ருதியோட அப்பா அம்மாவும் எங்க பொண்ண இவன் மிரட்டி அழைச்சிட்டு போயிருப்பான்.. அவனை ஜெயிலில் போடுங்க என்கின்றனர். ஆனால் ஸ்ருதி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி எங்க விருப்பத்தோடு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாங்க மேஜர் நான் ரவி கூட தான் போவேன் என்கிறார். இதோட இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top