எங்க திரும்பினாலும் கேமியோவா? கமல் படத்தில் களமிறங்கும் மல்லுவுட் ஸ்டார்…

Published On: May 4, 2024
| Posted By : Akhilan

Kamalhassan: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் எல்லா மொழி படங்களுமே கேமியோவை சாதாரணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில் புது கேமியோ குறித்த ஆச்சரிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நம் மொழி நாயகர்கள் கேமியோ செய்வது தான் வழக்கம். அதிலும் சில படங்களில் தான் பெரிய நடிகர்கள் நடிப்பார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

முன்னணி நடிகர்களான ஜீவா, ஆர்யா உள்ளிட்டோர்கள் தங்களுடைய படங்களில் நட்புரீதியாக சில கேமியோக்களை செய்து இருக்கின்றனர். இந்த கேமியோவுக்கெல்லாம் மாஸ்டர் பீஸாக அமைந்தது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் தான். ஒரே படத்தில் தெலுங்கில் இருந்து சுனில் நடித்திருப்பார்.

இந்தியில் இருந்து ஷாக்கி ஷெராப், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால் உள்ளிட்டோர்களும் கேமியோ செய்து இருந்தனர். அப்படம் பெரிய அளவில் ஹிட்டடிக்க, கேமியோ செய்வது ரசிகர்களிடம் பெரிய ஆர்வத்தினை ஏற்படுத்தியது. தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் மல்டி ஸ்டார்கள் நடிக்க இருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!

தொடர்ந்து தற்போது கல்கி 2898 ஏடி படத்தில் மலையாள சினிமாவை சேர்ந்த துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது.