கமலுக்கு ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்… மனுஷன் தலைல துண்டு போடாம பாத்துக்கோப்பா…

Published on: October 24, 2023
sivakarthikeyan
---Advertisement---

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தனது விடாமுயற்சியினால் வெள்ளி திரையில் வலம் வர ஆரம்பித்தார். இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின் எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் சினிமாவில் தனிப்பெயரையும் பெற்றார். ஆனால் அதன்பின் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பெரிதளவில் வெற்றியை பெறவில்லை. இவ்வாறு தொடர் தோல்வியை சந்தித்த சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் வெற்றியை பெற்று தந்தது.

இதையும் வாசிங்க:அடுத்தவன பத்தி தெரியலனா உங்க வேலையா பாருங்க!… சிவகார்த்திகேயனுக்காக வரிஞ்சிகட்டும் சீரியல் நடிகர்…

இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் ஏலியன் சம்பந்தமான கதைகளை கொண்ட முதல் திரைப்படம் இதுதான். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே சமயம் இசையமைப்பாளர் இமானுக்கு சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடைபெறும் சர்ச்சை இப்படத்தின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும் என நெட்டிசன்கள் கருத்தினை தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்குபின் சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸுடன் இணைந்து தனது அடுத்த படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகின்றார். இப்படம் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கிறார்.

இதையும் வாசிங்க:தீபாவளி ரேஸில் கமல், ரஜினியை முந்திய பிரபல நடிகர்.. ஆனா இப்போ அவருக்கு அப்பா சான்ஸ் கூட இல்லையாம்..!

இப்படத்தின் படபிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. காஷ்மீரில் 60 நாட்களில் முடிக்கவேண்டிய இப்படத்தின் படபிடிப்பினை 90 நாட்கள் வரை கொண்டு சென்றுள்ளனராம். அதனால் படத்தின் பட்ஜெட் எகிறியுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் படக்குழுவினரின் மேல் அதிருப்தியில் உள்ளனராம்.

அதனால் அங்கு படபிடிப்பினை முடித்தபின் சென்னையில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகையையே பட்ஜெட்டாக நிர்ணயித்துள்ளனராம். அதனை மீறி செலவு செய்யகூடாது எனவும் உறுதியாக கூறிவிட்டனராம். என்னமோ கமல் தலைல துண்டு விழாம இருந்தா சரிதான்.

இதையும் வாசிங்க:ஆசை ஆசையாய் கட்டிய வீடு! இப்படி ஆக்கிட்டாங்களே? அஜித் வீட்டில் திடீரென்று கை வைத்த அதிகாரிகள்

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.