Cinema News
விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…
Actor Vijay: ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனரானவர் லிங்குசாமி. இந்த படத்தை பார்த்தவர்கள் தமிழ் சினிமாவுக்கு அடுத்த விக்ரமன் கிடைத்துவிட்டார் என பேசினார்கள். மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா என பல நடிகர், நடிகைகள் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார்.
ஆனால், அடுத்தபடத்திலேலே ஆக்ஷன் கதையை கையில் எடுத்தார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் ரன். மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன் என பலரும் நடித்து வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக இருந்தது. இப்படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு ரசிகர்களே உருவானார்கள். ஏனெனில் குழந்தைதனமான முகபாவனை, அழகான முகம் என ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் துரோகம் செஞ்சதா சொன்ன டி. இமான்.. இப்போ அடுத்து யாருடன் கைகோர்த்துள்ளார் தெரியுமா?..
அதன்பின் பையா, சண்டக்கோழி, ஜி என அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கினர். சூர்யாவை வைத்து அவர் இயக்கிய அஞ்சான் படத்தில் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி பல்பு வாங்கினார். அதன்பின் சில படங்களை இயக்கினார். விஷாலை வைத்து சண்டக்கோழி 2 படத்தை எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை.
தமிழ்தான் செட் ஆகவில்லை. ஆந்திரா பக்கம் போவோம் என நினைத்து வாரியர் எனும் தெலுங்கு படத்தை இயக்கினார். அந்த படமும் ஹிட் அடிக்கவில்லை. இப்போது எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லிங்குசாமி பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: கமலுக்கு ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்… மனுஷன் தலைல துண்டு போடாம பாத்துக்கோப்பா…
ரன் படம் பற்றி பேசிய அவர் ‘முதலில் இந்த படத்தில் விஜயை நடிக்க வைக்க நினைத்தேன். அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரரிடம் கதை சொன்னேன். அப்போது விஜய் தமிழன் படத்தில் நடிக்க தயாராகி வந்தார். விஜயை வேறுமாதிரி கொண்டு செல்ல போகிறோம். மறுபடியும் காதல் கதை வேண்டாம்’ என எஸ்.ஏ.சி சொல்லிவிட்டார்.
அதன்பின் மாதவனை நடிக்க வைத்தோம். அடிவாங்கும் ஒருவன் திடீரென திருப்பி அடிப்பதுதான் அந்த படத்தின் முக்கிய டிவிஸ்ட். அந்த கதையில் விஜய் நடித்திருந்தால் ரசிகர்களுக்கு பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். படத்திற்கு எதிராக கூட அது திரும்பியிருக்க வாய்ப்புண்டு’ என லிங்குசாமி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அப்ப ரைட்ஸும் வாங்கலயா?!.. சைலைண்டா அந்த கதையை ஆட்டைய போட்ட லோகேஷ்…