திட்டினா திட்டட்டும்!.. அடுத்த வேலையை பார்ப்போம்!… அப்செட்டான விஜய்…

Published on: October 24, 2023
thalapathy 68
---Advertisement---

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் போன்ற பல பிரபலங்களும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே இப்படத்தினை பற்றிய பல அப்டேட்டுகள் வந்தவண்ணம் இருந்தன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தினை பற்றிய ஆர்வமும் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அப்டேட்டுகள் வெளிவந்து ஆர்வத்தினை ஏற்படுத்திய அளவு இப்படம் இல்லை என கருத்தினை தெரிவித்திருந்தனர்.

இதையும் வாசிங்க:அப்ப ரைட்ஸும் வாங்கலயா?!.. சைலைண்டா அந்த கதையை ஆட்டைய போட்ட லோகேஷ்…

இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பலவித கருத்துகளும் உலாவின. லியோ டிசெஸ்டர், லியோ ஸ்கேம் போன்ற பல எதிர்மறையான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்க் ஆனது. மேலும் இப்படமும் பல தெலுங்கு திரைப்படத்தின் காப்பி எனவும் கருத்துகள் இருந்தன.

இவை அனைத்தையும் பார்த்த விஜய் முகவும் அப்செட் ஆகி விட்டதாகவும் மேலும் இப்படத்தில் என்னமோ செய்ங்க என கூறிவிட்டு அவர் விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஒரு படம் நடித்து முடித்தபின் நடிகர்கள் சற்று ஓய்வு எடுப்பது இயல்பு. ஆனால் விஜய் அவ்வாறு செய்யாமல் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே தனது அடுத்த படமான தளபதி 68ல் நடிக்க கிளம்பிவிட்டார்.

இதையும் வாசிங்க:நீ ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் புளூசட்டமாறன்!..

மேலும் இவ்வாறு கிளம்பியதற்கு அவருக்கே லியோ திரைப்பட கதையின் மேல் பெரிதளவு நம்பிக்கை இல்லாததே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். எனவெ இனி லியோவை விட்டுவிட்டு தளபதி 68 அப்டேட்டுகளை அள்ளி வீசலாம் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் லியோவால் ஏற்பட்ட மனவருத்தமும் ரசிகர்களின் கோபமும் மறைந்து போகும் என படக்குழுவும் விஜய்யும் கருதியுள்ளனர்.

எனவேதான் ஏஜிஎஃப் எண்டடெயின்மெண்ட் தற்போது லியோ படத்தின் பூஜை வீடியோவை வெளியீட்டு ரசிகர்களுக்கு விஜய்யின் அடுத்த படத்திற்கான விருந்தை ஆரம்பித்துள்ளனர். எது எப்படியோ அடுத்த படமாவது விஜய்க்கு எல்லோருக்கும் பிடித்த வெற்றி படமாக அமையுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:தளபதி 68 பூஜை வீடியோ ரிலீஸ்!.. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என காஸ்டிங்கே கலர்ஃபுல்லா இருக்கே!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.