ரஜினி அழைத்தும் கமல் அனுமதியில்லாமல் வர மறுத்த பிரபலம்! தலைவருக்கே தண்ணி காட்டியவர் யார் தெரியுமா?

Published on: October 25, 2023
rajini
---Advertisement---

Rajini – Kamal : தமிழ் சினிமாவில் இரு பெரும் பில்லர்களாக இருந்து இன்று வரை கோலிவுட்டை கட்டி பாதுகாத்து வருகிறார்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். 80களில் தொடங்கிய இவர்களது ஆட்டம் விடாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறை நடிகர்களோடு டஃப் கொடுத்து கெத்து காட்டிக் கொண்டும் வருகின்றனர்.

இவர்களுக்கு இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் நிஜத்தில் சில விஷயங்களை கமலிடம் இருந்து ரஜினி கேட்டுக் கொள்வதும் ரஜினியிடமிருந்து கமல் அறிந்து கொள்வதுமான நட்புறவில் இருவரும் இருந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதல் வாரம் மொக்கை.. இரண்டாவது வாரமே சூப்பர் ஹிட்டான அஜித் படம்..! இயக்குனரின் நிலையோ பரிதாபம்..!

நாங்க எப்படிப்பட்டவர்கள் என்பதை பல மேடைகளில் நிரூபித்திருக்கிறார்கள். அதற்கு ஹைலைட்டாக அமைந்தது பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் மேடை. அதில் ரஜினியும் கமலும் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இருவருக்குள்ளும் இந்தளவுக்கு நெருக்கம், அன்பு, பாசம் இருக்கிறதா என்று மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நிலையில் ரஜினி அருணாச்சலம் படத்திற்காக வசனம் எழுத கிரேஸி மோகனுக்கு தொலைபேசியில் அழைத்து அருணாச்சலம் படத்தில் நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: 33 வருஷம் ஆச்சு… என் குருவுடன் மீண்டும்.. தலைவர்170 படப்பிடிப்பில் சிலர்த்த ரஜினிகாந்த்..!

அதற்கு கிரேஸி மோகன் உங்கள் படத்தில் எழுத வேண்டுமென்றால் முதலில் கமலிடம் அனுமதி பெற்றபிறகுதான் சொல்வேன் என சொல்லியிருக்கிறார். அதற்கு  முன்பாகவே ரஜினி கமலுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்லிவிட்டாராம்.

கிரேஸி மோகன் கமலின் 8, 9 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர். கமலிடம் அனுமதி பெறுவதற்காக கமல் வீட்டிற்குள் கிரேஸி மோகன் நுழைந்ததும் ‘வாங்க வாங்க ரஜினி படத்தில் வசனம் எழுத போறீங்களாமே’ என்று சொல்லிக் கொண்டே கமல் வந்தாராம்.

இதையும் படிங்க: அழுது புலம்பிய மீனாவுக்கு சரியான அட்வைஸ் கொடுத்த அம்மா..! ஸ்ருதி ஆசையை கெடுத்த ரவி..!

அதன் பிறகு கிரேஸி மோகனிடம் கமல் ‘இந்த வாய்ப்பையும் தவறவிடாதே. தயங்காமல் போய் எழுது ’ என்று சொல்லி கிரேஸி மோகனை அனுப்பி வைத்தாராம் கமல்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.