டூயட்டுக்கு டாட்டா! இப்படி இறங்கிட்டா பெண் ரசிகைகளின் நிலைமை? சூப்பரான சூர்யா43 அப்டேட்

Published on: October 25, 2023
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு முன்னணி மாஸ் ஹீரோவாக அறியப்படுகிறார். சினிமா பற்றி எதுவுமே தெரியாமல் வந்தவர்தான் சூர்யா. நடனம் ஆட தெரியாது. நடிக்க தெரியாது. கொடுத்த வசனங்களை ஒழுங்கா கூட பேசத்தெரியாது. இப்படி பட்டவர் இன்று தேசிய விருது நாயகனாக இருக்கிறார் என்றால் அதற்காக சூர்யா பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்க முடிகிறது.

ஒரு நல்ல மகனாக, நல்ல கணவராக, இரண்டு குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக தனது அனைத்து  பொறுப்புகளையும் நல்ல முறையில் செய்து கொண்டு சிறந்த நடிகராக திகழ்கிறார் சூர்யா.தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்றுப் பின்னணியில் அமைந்த கதையில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஜெயம் ரவியா..? லாரன்ஸா..? இந்த வார ஓடிடி ரிலீஸ்.. ஏகப்பட்ட தமிழ் படங்கள்… செம வேட்டை தான்..!

இந்தப் படத்திற்கு பிறகு சுதா கொங்கராவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் சூர்யா. இந்த சூர்யா 43 படத்தை பற்றி ஒரு புதிய அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சூர்யா43 படத்தின் ஒன் லைன் அல்லது படத்தில் முக்கிய ஒரு பகுதியாக இந்த சம்பவம் இருக்கும் என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 1967ஆம் ஆண்டு மாணவர்களின் கிளர்ச்சியாக மாறியது இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்த போராட்டத்தில் பங்கேற்று பல பேர் தீக்குளித்து இறந்தனர்.

இதையும் படிங்க: டம்மி துப்பாக்கி.. அட்டக்கத்தி.. வெறும் பில்டப்பு!.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்…

அந்தளவுக்கு இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதைப் பற்றித்தான் சூர்யா 43 படமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அல்லது இது சம்பந்தப்பட்டு எதாவது ஒரு காட்சி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாக போகும் இந்த சூர்யா 43 படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மானும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த சூர்யா சமீபகாலமாக இந்த மாதிரி சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரேட்டிங்காக வாழ்க்கையோட விளையாடுறதா? பிக்பாஸில் பத்திக்கிட்டு எரியும் சம்பவம் – நினைச்சத சாதிச்சிட்டாங்கே

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.