Cinema History
சாரி நான் இமயமலைக்கு போகணும்!. ரஜினியை தடுத்து ஒரே நாளில் எடுத்த பாட்டு!.. அட செம ஹிட்டு!…
Annamalai movie: ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது திட்டமிட்டபடி அப்படியே எடுத்துவிட முடியாது. இயக்குனர்களுக்கு திடீர் திடீரென சில புதிய ஐடியாக்கள் வரும். சில சமயம் மொத்த கதையே கூட மாறிவிடும். அஜித்தின் வலிமை படம் துவங்கியபோது அதன் கதை வேறு. ஆனால், கொரோனா ஊரடங்கில் படம் சிக்கிய பின் மொத்த கதையுமே மாறிப்போனது.
இப்படி மாறுவது சில சமயம் ரசிகர்களுக்கு பிடித்து ஹிட் ஆகிவிடும். சில சமயம் தோல்வி அடையவும் வாய்ப்புண்டு. அதேபோல், ஒரு முழுப்படத்தை எடுத்து முடித்தபின்னரும் கூட இயக்குனர்களுக்கு புதிய சிந்தனைகள் வரும். ஆனால், கால்ஷீட் முடிந்துவிட்டால் சில நடிகர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். சில ஹீரோக்கள் நடித்து கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: ரஜினி அழைத்தும் கமல் அனுமதியில்லாமல் வர மறுத்த பிரபலம்! தலைவருக்கே தண்ணி காட்டியவர் யார் தெரியுமா?
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் அண்ணாமலை. குஷ்பு, மனோரமா, ரேகா, சரத்பாபு, ராதாரவி, ஜனகராஜ் என பலரும் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இது. ரஜினியின் குரு பாலச்சந்தர் தயாரித்த படம் இது. இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
நண்பன் சரத்குமார் தனது வீட்டை இடித்துவிட ‘நீ எப்படி என் வீட்டை இடிச்சி நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ.. அதேமாதிரி நானும் உனக்கு செய்வேன்’என ரஜினி தொடையை தட்டி சவால் விட்டு ஜெயித்துக்காட்டுவார். தொழில் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் உயர்வதை ‘வெற்றி நிச்சயம் அது வேத சத்தியம்.. கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்’ என்கிற ஒரு பாடலில் காட்டியிருப்பார்கள்.
இதையும் படிங்க: கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…
இந்த பாடல் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சுரேஷ் கிருஷ்ணா ‘அண்ணாமலை படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அந்த பாடல் காட்சிகளாக மட்டுமில்லாமல் ரஜினி சார் சில வரிகளை பாடினால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றியது.. ஏனெனில், வைரமுத்து சார் அவ்வளவு அர்த்தமுள்ள வரிகளை எழுதியிருந்தார்’
ஆனால், நான் இமயமலைக்கு கிளம்பிட்டேன்.. நடிக்க முடியாது என ரஜினி சொன்னார். சார் ஒரே ஒரு நாள் மட்டும் நடிங்க.. எனக்கேட்டேன். அவரும் சம்மதிக்க ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு அறையில் அவரை வைத்து அந்த காட்சிகளை எடுத்தேன்’ அந்த காட்சிகள் அந்த பாடலுக்கே பிளஸ்பாயிண்டாக அமைந்தது’ என சுரேஷ் கிருஷ்ணா பேசியிருந்தார்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜிடம் ரஜினி கேட்ட முதல் கேள்வி!.. அட இவ்வளவு நடந்திருக்கா?!..