கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…
மக்கள் திலகம் என அழைக்கப்படுபவர் சிவாஜி. இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் இவர் பாசமலர், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.
இவரது சொந்த வீடுதான் அன்னை இல்லம். இந்த வீடு சிவாஜி கணேசன் சினிமாவில் சம்பாதித்து ஆசை ஆசையாய் கட்டியது. மேலும் சிவாஜிகணேசனுக்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர். குடும்ப ரீதியாகவும் இருவரும் நெருங்கியவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து படிக்காதவன், விடுதலை மற்றும் படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தனர்.
இதையும் வாசிங்க:அவன எப்படி வச்சிருந்தேன்? இப்படி ஆக்கிட்டீங்களேடா! விஜயை பற்றி சந்திரசேகர் உருக்கமான பேட்டி
படையப்பா படத்தில் நடிக்கும்போது சிவாஜி ஒரு முறை ரஜினியிடம் ‘நான் இறந்துவிட்டால் நீ என் இறுதிசடங்கிற்கு வருவாயா?’ என கேட்டுள்ளார். அவ்வாறு சிவாஜி கேட்டுகொண்டதால் ரஜினியும் அவரின் இறுதி ஊர்வலத்தில் தான் ஒரு மகனான நின்று தனது கடமையை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
சிவாஜி இறந்தபின் சில காலம் கழித்து சிவாஜியின் அன்னை இல்லம் விற்பனைக்கு வருவதாக ரஜினிகாந்த் கேள்விபடுகிறார். அப்போது அதனை கேட்ட ரஜினி பதறியபடி சிவாஜியின் மகனான பிரபு மற்றும் ராம்குமாரிடம் சென்று ‘எதற்காக இப்படி ஒரு முடிவினை எடுத்தீர்கள்?’ என கேட்டுள்ளார்.
இதையும் வாசிங்க:ராதிகாவால் ராதாவுக்கு கிடைக்காம போன தேசிய விருது!.. உயிர குடுத்து நடிச்சும் வீணாப்போச்சே!…
அப்போது பிரபுவும் கொஞ்சம் கடன் தொல்லை இருப்பதால் இவ்வாறு அதனை விற்றுவிடலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில்தான் ரஜினியின் பாபா திரைப்படம் வந்த காலம். இப்பட தோல்விக்குபின் ரஜினி மிகுந்த மனகஷ்டத்தில் இருந்து சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்துள்ளார்.
ஆனால் இப்படி ஒரு செய்தியை கேள்விபட்டதும் ரஜினிகாந்த் அவர்களுக்காக தான் ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என வாக்கு கொடுத்துள்ளார். அப்படி உருவான படம்தான் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி. இப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் மூலம் சிவாஜியின் குடும்பமும் கடன் பிரச்சினையிலிருந்து தப்பித்தனர்.
இதையும் வாசிங்க:அஜித்கிட்ட பிடிச்ச விஷயம்! பல பேட்டிகளில் மறைக்காமல் விஜய் சொன்ன நச் பதில் – சரியாத்தான் சொல்லிருக்காரு