அஜித் படத்தில் முதலில் ஹீரோ இவர்தான்! கடைசியில் அதே படத்திற்கு அஜித்தின் நண்பராக மாறிய சம்பவம்

Published on: October 26, 2023
ajth
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக உச்சம் பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அஜித் இந்தளவுக்கு உயரத்தை அடைவார் என்று ஆரம்பகாலங்களில் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஏன் அஜித்தின் ஆரம்பகால படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கும் அஜித்தின் வளர்ச்சி ஒரு அபாரமாகவே பார்க்கப்படுகிறது.

இப்போது அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் விறுவிறுப்பாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. படம் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 30ல் நிறைவடைந்து படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸுக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:ராக் ஸ்டாரை மாத்தி ராபரி ஸ்டார்னு வச்சிக்கோ!. அனிருத்தை விளாசிய புளூசட்ட மாறன்…

அடுத்ததாக அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருக்கிறார்.இந்த நிலையில் அஜித் எந்தளவுக்கு நன்றியை மறவாதவர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வி.சி.குகநாதன் இயக்கி தயாரித்து அஜித் நடிப்பில் வெளியான படம் மைனர் மாப்பிள்ளை.

இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது ரஞ்சித்தாம். ஆனால் ரஞ்சித் வேறொரு படப்பிடிப்பில் மேலே இருந்து விழுந்து கணுக்காலில் ஏதோ அடி பட்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லையாம். அந்த சமயத்தில்தான் அஜித் அமராவதி படத்தில் நடித்து முடித்து ஆசை படத்தில் கமிட் ஆகியிருந்தாராம்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ வெற்றியால் துள்ளும் ரஜினி! கண்ட்ரோல் முழுக்க அவர்தான் – ரஜினி170ல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ஞானவேல்

இவரை பார்த்ததும் குகநாதனுக்கும் பிடித்துப் போக மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்தை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே ஆசை படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டதாம். அதே சமயம் சிவசக்தி பாண்டியன் வான்மதி கதைக்கு அஜித்தான் பொருத்தமாக இருப்பார் என்று அந்தப் படத்திற்கும் அஜித்தை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

ஆக மொத்தம் ஆசை, வான்மதி போன்ற படங்களினால் மைனர் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பில் கொஞ்சம் தாமதம் ஏற்பட குகநாதன் அஜித்தை வறுத்தெடுத்திருக்கிறார். படத்தை எப்படியோ முடித்துவிட அந்தப் படம் லாபமான படமாகவே குகநாதனுக்கு அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: டைட் டிஷர்ட்டில் சமந்தா!.. சைலன்ட்டா மும்பையில் என்ன பண்றாருன்னு பாருங்க.. வைரலாகும் வீடியோ!..

ரஞ்சித் மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்தின் நண்பராக ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு வேறொரு படத்திற்காகவும் குகநாதன் அஜித்துக்கு ஒரு அட்வான்ஸை கொடுத்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு காதல் கோட்டை, காதல் மன்னன் என அஜித்தின் டிராக் அப்படியே வளர வளர அந்த அட்வான்ஸ் அப்படியே அஜித்திடமே இருந்ததாம்.

கேட்க வேண்டாம் என குகநாதனும் விட்டுவிட்டாராம். ஆனால் சமீபத்தில் ஏர்போர்ட் மாறியான ஒரு இடத்தில் குகநாதன் நிற்க அவரை கடந்து போன அஜித் அவரை பார்த்ததும் திரும்பி வந்திருக்கிறார். குகநாதனை பார்த்ததும் சார் அந்த அட்வான்ஸ் என்று ஆரம்பித்ததும் குகநாதனுக்கு ஒரே ஆச்சரியமாம்.

அதுமட்டுமில்லாமல் அந்த அட்வான்ஸுக்கு படம் பண்ணித்தரேனு நினைத்திருந்தேன் என்று அஜித் சொல்ல இருக்கட்டும் தம்பி, நீங்கள் சொன்னதே பெரிய விஷயம் என்று இந்த விஷயத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் குகநாதன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.