லியோ வசூல் 500 கோடி தான்… ஆனா தளபதியை அசிங்கப்படுத்த களமிறங்கிய போட்டி நடிகர்..!

Published on: October 26, 2023
---Advertisement---

Leo Hits 500crores: விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வசூல் 500 கோடி தான். ஆனால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நெகட்டிவ் விமர்சனத்துக்கு பின்னால் ஒரு பெரிய நடிகரின் சதியே இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலீஸாகி 7 நாட்களை கடந்து விட்டது. முதல் நாளில் இருந்து படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகமாக உலா வருகிறது.

இதையும் படிங்க: ஐ யம் சாரி லோகேஷ்!.. கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்!. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…

அதுவும் இல்லாமல் #LeoScam, #LeoDisaster என்ற ஹேஸ்டேக்குகளும் வைரலாக தொடங்கியது. கிட்டத்தட்ட 7 நாட்களை கடந்தும் அந்த ஹேஸ்டேக்குகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை சொல்லியும் கூட பலரும் ட்ரோல் செய்து கொண்டே இருக்கின்றனர்.

மற்றுமொரு பக்கம் பார்க்கும் போது, லியோ படம் தமிழகத்தில் 85 சதவீத வசூலை எடுத்து விட்டது. கிட்டத்தட்ட் 7 நாட்களில் 500 கோடி வசூல் செய்து விட்டது என்னவோ உண்மை தான். இதை மறைக்க தான் விஜயின் எதிர் கோஷ்டி மறைமுகமாக ஒரு சித்து விளையாட்டை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நைட் 10 மணிக்கு போன் பண்ணி டார்ச்சர்! பிரபல நடிகையிடம் இருந்து அமீரை காப்பாற்றிய தனுஷ்!

அதாவது லியோ படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக சொல்லி விட்டது உண்மையாக இருந்து விட்டால் விஜயின் புகழ் அதிகரித்து விடும். இதை தடுக்க படத்தின் ரிலீஸான முதல் நாளில் இருந்து பொய்யை பரப்ப ஐடி விங் ஒன்றை உருவாக்கி முழு நேர வேலை செய்து வருகின்றனராம்.

மேலும் பல பிரபல விமர்சகர்களுக்குமே பெத்த தொகையை கொடுத்து தொடர்ந்து லியோ குறித்து நெகட்டிவ் விமர்சனத்தின மட்டுமே கூறவேண்டும் என்ற கட்டளையும் பிறக்கப்பிக்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் தான் ட்விட்டரில் நெகட்டிவாக ஒரு கோஷ்டி பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.