கதையின் மீது நம்பிக்கை இல்லாமல் தயாரிப்பாளரே கொடுத்த தொல்லை… ஒரே படத்தால் ஓஹோ புகழ் கொடுத்த விக்ரமன்..!

Published on: October 26, 2023
---Advertisement---

Vikraman: தமிழ் சினிமாவில் வெளியான சில படங்களை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு படைப்பாக தங்கிவிடும். அதுப்போல இன்றும் பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என நினைத்தாலே பலர் நினைவுக்கு வரும் படம் தான் சூர்யவம்சம்.

சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பது தான் கதை. அதை அவர்கள் சாதித்து காட்டும்படி அமைந்து இருந்த சூர்யவம்சம் படம் அமோகமாக ஓடியது.

இதையும் படிங்க: நீ வா தல…! கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் இனி அதிரும்..! சூர்யா – சுதா கொங்காரா படத்தின் டைட்டில் இதான்..!

கிட்டத்தட்ட அந்த காலத்தில் சூப்பர்ஹிட் வெற்றியை படைத்தது. ஆனால் இந்த கதையை விக்ரமன் எடுக்கும் போது ஆர்.பி.சௌத்ரிக்கு நம்பிக்கையே இல்லையாம். இந்த கதை சாதாரணமாக இருக்கிறது. ஓடிவிடுமா என ஒரு கவலையிலேயே இருந்தாராம். ஆனால் படம் வெல்லும் என நம்பிய ஒருவர் விக்ரமன் மட்டும் தானாம்.

அசிஸ்டென்ட் டைரக்டரா விக்ரமன் இருந்த நேரத்தில் விஜயகுமாரை அப்பா ரோலுக்கும், கார்த்திக்கை மகன் ரோலுக்கும் போட்டு தான் ஒன்லைன் எழுதினாராம். ஆனா, இந்தக் கதையை முதல்படமா பண்ண விரும்பாமல் புதுவசந்தம் மூலம் எண்ட்ரி ஆனார்.

அதை தொடர்ந்து ‘சூர்யவம்சம்‘ கதையின் ஒன்லைனை சரத்குமாரிடம் சொல்ல அவர் நானே இரட்டை வேடத்தில் பண்ணி விடுகிறேன் என்றாராம். சரியென குற்றாலம் படத்தின் டிஸ்கஷனுக்கு போயிருக்க அங்கே வானத்தை போல கதை தான் முதலில் கிடைத்தது. 

இதையும் படிங்க: இந்த க்ளைமேக்ஸ் நல்லா இல்ல.. இயக்குனரை வெறுப்பேற்றிய தளபதி விஜய்..! சூப்பர் ஹிட் போச்சா..!

இதையடுத்து படத்தினை கஷ்டப்பட்டு முடித்து தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யலாம் என நினைத்தாராம். ஆனால் சௌத்ரியோ அந்த நேரத்தில் லவ் டுடே படத்தினை தயாரித்து கொண்டு இருக்க லீவ் டைமில் காதல் சப்ஜக்ட் தான் சரியாக இருக்கும் என நினைத்து சூர்யவம்சதுக்கு நோ சொல்லி விட்டாராம்.

இப்படி பல தடைகளை தாண்டி வந்தால் கூட படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாக அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என கடந்த வருடம் சரத்குமார் அறிவிக்கப்பட்டு அந்த படமும் தற்போது கிடப்பில் போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.