எந்த நடிகரையும் வீட்டுக்கு சாப்பிட அழைக்காத சூர்யா! இவர் மட்டும் ஏன் ஸ்பெஷல்? யாருனு தெரியுமா?

Published on: October 27, 2023
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு மாஸ் ஹீரோவாக மதிக்கத்தக்க நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரெல்லாம் இந்தளவுக்கு சினிமாவில் ஜொலிப்பாரா என அவரது அப்பாவான சிவக்குமாருக்கே ஆச்சரியம்தான். அந்தளவுக்கு சினிமாவை பற்றி எதுவும் தெரியாதவராகத்தான் இருந்திருக்கிறார் சூர்யா.

ஆனால் இப்போது விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு படத்திற்காக மெனக்கிடுவதை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாகவே இருக்கின்றது. உடலை வருத்தி நடிக்கும் சூர்யாவை கண்டு ஒரு சமயம் சிவக்குமாரே வேதனைப் பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு வேளை ‘சமுத்திரம் 2’ படமா இருக்குமோ? தளபதி 68ல் அதிரிபுதிரியாக நுழைந்த சூப்பர் ஹிட் பட நாயகி

யாரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் இல்லை சூர்யா. கார்த்தி கலகலப்பான கேரக்டர். ஆனால் சூர்யா மிகவும் அமைதியானவர். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வரும் சூர்யாவின் அடுத்தப் படமான புறநானூறு படத்தின் டைட்டில் நேற்றுதான் வெளியானது.

வழக்கம் போல் இந்தப் படம் என்னமாதிரியான படமாக இருக்கும் என ரசிகர்கள் டிகோடிங் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஆங்கரும் நடிகருமான ஜெகன் சூர்யாவை பற்றி ஒரு பேட்டியில் மிகவும் பெருமையாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நான் இனிமே இதை செய்யவே மாட்டேன்… எஸ்.ஜே.சூர்யாவே நோ சொன்ன செய்தியால் ஷாக்கான ரசிகர்கள்…!

இருவரும் சேர்ந்து அயன் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவும் ஜெகனும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டார்களாம். ஜெகனை சூர்யா அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு போய் அவரது அம்மா கையினால் சாப்பாடு எல்லாம் பரிமாறினார் என்று ஜெகன் கூறினார்.

ஆனால் அதுவரை சூர்யா யாரையும் எந்த நடிகரையும் வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டதே இல்லையாம். அந்தளவுக்கு ஜெகன் சூர்யாவுக்கு நெருக்கமாகியிருக்கிறார். சூர்யா ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11. ஜெகனின் திருமணம் அடுத்த நாளாம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டியில் என்ன நடந்தது.. பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்… ப்ரின்ஸ் நிலைமை படுமோசம்..!

அதே போல் சூர்யாவின் மகள் தியாவின் பிறந்த நாள் ஆகஸ்ட்10. ஜெகன் மகனின் பிறந்த நாள் ஆகஸ்ட்11 என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும் ஜெகனை பார்த்து சிவக்குமாரும் ‘ நீ நல்லா நடிப்பனு சூர்யா சொன்னான். ஆனால் இவ்வளவு நல்லவனா இருப்பனு தெரியாது’ என்று சொல்லி புகழ்ந்தாராம்.