சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டியில் என்ன நடந்தது.. பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்… ப்ரின்ஸ் நிலைமை படுமோசம்..!
Sivakarthikeyan vs DImman: ஒரே பேட்டியால் வெடித்த பூதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் பலரும் இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? என பல கேள்விகளையும் பதில்களையும் முன்வைத்து வருகின்றனர்.
எனக்கு பெரிய துரோகத்தினை சிவகார்த்திகேயன் செய்து விட்டார். இந்த ஜென்மத்தில் அவருடன் இனி என்னால் வேலையே செய்ய முடியாது. அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நான் இசையமைப்பாளராகவோ, அவர் நடிகராகவோ வந்தால் சேர வாய்ப்பு என பேசி இருந்தார்.
இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…
அந்த வீடியோ தான் இப்போ கோலிவுட்டில் இருக்கும் பரபரப்புக்கே காரணம். சிவகார்த்திகேயன் மீதும், டி.இமான் மீதும் வரைமுறை இல்லாத பல குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் தன் குறித்து எழும் வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் சைடில் பல கோடியை இறக்கி பல மீம் பேஜ் வாயை அடைத்து இருக்கிறாராம். பல விமர்சகர்களுக்கும் காசு கொடுத்து இதையே செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் இந்த விஷயம் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நயனுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்… அடுத்த பட சம்பளம் இவ்வளவோ?
அதில் டி.இமான், சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு காரணம் ஒரு நைட் பார்ட்டி தான். அந்த நிகழ்ச்சியை சிவா நடத்தினார். இமானுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர் அப்போது பிசியாக இருந்ததால் தன் மனைவியை அனுப்பி வைத்து இருக்கிறார்.
பொதுவாக சினிமா நைட் பார்ட்டியில் என்ன நடக்கும் என தெரியாதவரா இமான். இதுவே தப்பு தான். அங்கு ஆரம்பித்தது தான் இருவருக்கும் உள்ள பிரச்னை. இப்போ பேசி என்ன பிரியோஜனம்? அந்த அம்மா அமைதியா போன போதே தெரியலையா என காரசாரமாக கேட்டு இருக்கிறார்.